Wednesday, 27 September 2017

muththolaeram

முத்தொள்ளாயிரம்
இந்த பக்கம் சில பிரச்சனைகளை கொண்டுள்ளது
முத்தொள்ளாயிரம்
முத்தொள்ளாயிரம் என்பது தமிழ் இலக்கியத்தில் தொகை நூல் வகையைச் சேர்ந்தது. இந்நூலின் பாடல்களைப் பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை. இவை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய நூல். ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் அடங்கிய தொகுப்பு எனக் கருதப்படுகின்றது. இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. பல்லாண்டுகளுக்கு முன்னர்ப் புறத்திரட்டு ஆசிரியர் நூற்றொன்பது பாக்களை மட்டும், தம் தொகை நூலில் திரட்டி வைத்துள்ளார். அவை கடவுள் வாழ்த்தாக ஒன்றும், சேரனைப் பற்றி இருபத்திரண்டும், சோழனைப் பற்றி இருபத்தொன்பதும், பாண்டியனைப் பற்றி ஐம்பத்தாறும் சிதைந்த நிலையில் ஒன்றுமாகக் காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெண்பாக்களாகும். மூவேந்தர்களின் நாடு, அரண், படைச் சிறப்பு, போர்த்திறம், வீரம், ஈகை முதலான அரிய செய்திகள் இந்நூலில் இடம்பெறுகின்றன. அருணோதயம் பதிப்பபு நூலுக்கு மதிப்புரை வழங்கியுள்ள சென்னைப் புதுக்கல்லூரிப் பேராசிரியர் நா. பாண்டுரங்கள் முத்தொள்ளாயிரப் பாடல் ஒவ்வொன்றும் தகதகக்ககும் தங்கநிலா என்று பாராட்டியுள்ளார். மேலும் கடைவாயில் அடக்கிக்கொண்டு சப்பிச் சுவைக்க வேண்டிய கற்கண்டு என்று குறிப்பிட்டுள்ளார். உலா வரும் அரசன்மீது காதல் கொண்டு தலைவி கூறும் ஒருதலைக் காமச் செய்திகளை, கைக்கிளைப் பொருண்மைச் செய்திகளை கொண்ட பாடல்கள் இதில் பெரும்பகுதியாக இடம்பெற்றுள்ளன.
 புத்தகத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்!



பாடல்கள்

செங்கைப் பொதுவன் உரையுடன்
கடவுள் வாழ்த்து தொகு

மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப் – பின்னரும்
ஆதிரையான் ஆதிரையான் என்றென்(று) அயருமால்
ஊர்திரைநீர் வேலி உலகு – 1

என்றும் நிலைபெற்றிருக்கும் நாளுக்குத் தமிழர் பெயர் சூட்டியுள்ள விண்மீன் தொகுதிகள், மதியம், கனலும் கதிரவன் என்று இவற்றையெல்லாம் முதன்முதலில் படைத்த முதல்வனைப் பின்னரும் ஆதிரையான் (திருவாதிரை நாளுக்கு உரிய சிவன்), ஆதிரையான் (ஆ திரையான் ஆகி, வளரும் கடலின் அலைத்திரையில் பள்ளிகொண்டிருக்கும் திருமால்) என்று கடலை வேலியாக உடைய உலகில் வாழும் மக்கள் கொண்டாடுகின்றனர்.
சேரன் 2-5 தொகு

தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத்
தேயத் திரிந்த குடுமியவே – ஆய்மலர்
வண்டுலாஅங் கண்ணி வயமான்தேர்க் கோதையை
கண்டுலாஅம் வீதிக் கதவு – 2

கோதை வண்டு மொய்க்கும் பூமாலை அணிந்துகொண்டு குதிரை பூட்டிய தேரில் உலா வந்தான். அவன் அழகைக் காண விரும்பி மகளிர் கதவைத் திறந்தனர். கண்டால் அவள் மயங்கிவிடுவாள் என்று அவர்களது தாய்மார் கதவை மூடினர். இப்படி ஒருவர் மூட, ஒருவர் திறக்க இருந்ததால் கதவு மாட்டியிருந்த கொண்டி தேய்ந்ததுதான் மிச்சம். யாருடைய எண்ணமும் நிறைவேறவில்லை
வாமான்தேர்க் கோதையை மான்தேர்மேல் கண்டவர்
மாமையை அன்றோ இழப்பது – மாமையிற்
பன்னூறு கோடி பழுதோ,என் மேனியிற்
பொன்னூறி யன்ன பசப்பு - 3

சேரன் கோதை தாவும் போர்க்குதிரை பூட்டிய தேரில் செல்பவன். அவன் இப்போது மதுவாகச் செல்லும் குதிரை பூட்டிய தேரில் உலா வருகிறான், அவனைக் கண்ட மகளிர் தன் மேனியிலிருந்த மாந்தளிர் போன்ற மாமை நிறத்தை இழந்துவிட்டனர். நானோ என் மேனியில் பொன்னிறம் ஊறிக்கிடப்பது போன்ற பசப்பு நிறத்தைப் பெற்றிருக்கிறேன். இது பழுதாகுமா? ஆகாது. மாமை நிறத்தைக் காட்டிலும் பல நூறு மடங்கு எனக்கு மேன்மையானது. காரணம் அவனுக்காக ஏங்கிக் கிடைத்த பேறு ஆயிற்றே – என்கிறாள் ஒரு தலைவி.
 கடற்றானைக் கோதையைக் காண்கொடாள் வீணில்
அடைத்தாள் தனிக்கதவம் அன்னை – அடைக்குமேல்
ஆயிழையாய் என்னை அவன்மேல் எடுத்துரைப்பார்
வாயும் அடைக்குமோ தான் - 4

சேரமன்னன் கோதை கடல் போன்ற படைசூழ ஊர்வலம் வருகிறான். ஆயிழைத் தோழியே! அவனைக் காண்ணாரக் காணவொட்டாமல் தாய் கதவை அடைத்துத் தாளிட்டிருக்கிறாள். ஆயின், அவனோடு என்னைச் சேர்த்துப் பேசும் ஊரார் வாயை அவளால் அடைக்கமுடியுமா?

வரைபொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும்
நிரைபொரு வேல்,மாந்தைக் கோவே – நிரைவளையார்
தங்கோலம் வவ்வுதல் ஆமோ அவர்தாய்மார்
செங்கோலன் அல்லன் என. – 5

மன்னா! வணங்காதவரை வணங்கச் செய்து அவர்தம் மண்ணைக் கொள்ளலாம். உன் வலையில் விழுந்து கிடக்கும் பெண்ணின் அழகைக் கவரலாமா? பெண்ணின் தாய்மார் உன்னைச் செங்கோலன் அல்லன் என்று கூறுகிறார்களே! மாந்தை நகர மக்களின் கோ. மலை போல் அகன்ற மார்பினை உடையவன். நிரையாக நின்று வேலால் தாக்குபவர் மாந்தை நகர மக்கள். மகளிர் வரிசையாக வளையல் அணிந்தவர். கையின் வளையல் கோலத்தை வௌவலாமா?

No comments:

Post a Comment