Monday, 30 October 2017

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது பழைய உரை
பண்டைத் தமிழர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் பாடல்களாகவே அமைந்திருந்தன. பண்டைய இயற்சொற்கள் பல அவற்றில் விரவி வந்தமையால் அவற்றைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு நல்லறிஞர்கள் பலர் பாடல்களுக்கு உரை எழுதினர். அவற்றில் பழமையான உரைகள் 1200 – 1500 ஆம் ஆண்டுக்கால இடைவெளியில் தோன்றியவை.[1]

திணைமொழி ஐம்பது நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. உரை ஆசிரியர் பெயர் தெரியவில்லை.[2]

இந்த உரை ஏனைய பழைய உரைகளைப் போலத் தெளிவான பொழிப்புரையாக உள்ளது. சிறப்புக் குறிப்புகள் எதுவும் இதில் இல்லை.

இந்த உரைநூலின் காலம் 13ஆம் நூற்றாண்டு.

Sunday, 29 October 2017

கைநிலை

கைந்நிலை - பதினெண் கீழ்க்கணக்கு





'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றிக் குறிப்பிடுவதால் கைந்நிலை எனப்பட்டது. இந் நூலைச் இயற்றியவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார்.





நூல்


1. குறிஞ்சி


வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்

நுகர்தல் இவரும் கிளிகடி ஏனல்
நிகரில் மடமான் எரியும் அமர் சாரல்
கானக நாடன் கலந்தான் இவன் என்று
மேனி சிதையும் பசந்து. 1


தினைக்கதிரைத் தின்பதற்காகத் தினைத்தாளின் மேல் ஏறுங் கிளிகளை யோட்டுகின்ற தினைப்புனத்தின்கண் ஒப்பில்லாத இளமையான மான்கள் நெருங்கித் திரியும் விரும்புகின்ற மலைச்சாரலில் காட்டிற்கு உள்ளாகிய நாட்டையுடையவன் என்னைப் புணர்ந்தான் அவ்வாறு புணர்ந்த தலைவன் இஞ்ஞான்று அருகில் இல்லாது பிரிந்தான் என்பதையறிந்து என் உடல் பசலை நிறமாகி எழிலழிந்தது, (என்று தலைவி தோழிக்குக் கூறினாள்.) 

Saturday, 28 October 2017

ஐந்தினை ஐம்பது

ஐந்திணை ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு





இந்நூல் முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது. இந் நூலின் ஆசிரியர் மாறன் பொறையனார். 



நூல்


பாயிரம்


பண்புள்ளி நின்ற பெரியார் பயன்தெரிய
வண்புள்ளி மாறன் பொறையன் புணர்த்தியாத்த
ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்
செந்தமிழ் சேரா தவர்.


மெய்யம்மையான இலக்கப் புள்ளி யிடுவதாகிய கணக்கிற் றேர்ச்சியுள்ள மாறன் பொறையன் என்ற சிறப்புப்பெயர் பெற்ற புலவர் பெருமான், மக்கட் பண்புகளை, ஆராய்ந்தறிய அவாவிக் கொண்டிருக்கும் படியான, உயர்ந்தோராகிய உலகமக்கள், நூற்பயனாகிய அகப் பொருள்களின் நுட்பங்களை, நன்குணரும்படியாக, அகப்பொருட்டுறைகள் பலவற்றை சேர்த்து, செய்யுள் வடிவமாக இயற்றிய, முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்தொழுக்கங்களினையும் தம்முள் அமைத்துக் கொண்டுள்ள ஐம்பது செய்யுட்களையும், விருப்பத்துடன், படித்து அறியாத மக்கள், செவ்வையான தமிழ் மொழியின் பெரும் பயனை, அடையப்பெறாதவர்களாவார்கள். 

1. முல்லை

இடம் - காடும் காடு சேர்ந்த இடமும்
ஒழுக்கம் - ஆற்றி இருத்தலும் இருத்தல் நிமித்தமும். 

மல்லர்க் கடந்தான் நிறம்போல் திரண்டெழுந்து
செல்வக் கடம்பமார்ந்தான் வேல்மின்னி - நல்லாய்
இயங்கெயில் எய்தவன தார்பூப்ப ஈதோ
மயங்கி வலனேருங் கார். 1


"(தலைவியே!) மல்லர்களை அழித்த திருமாலின் கரிய நிறம் போன்று கருத்து எழுந்து சிறப்புப் பொருந்திய கடம்ப மரத்தில் அமர்ந்திருக்கக் கூடிய முருகப் பெருமானுடைய வேலாயுதத்தைப் போல் மின்னி விளங்குகின்ற மூன்று கோட்டைகளாய் நின்ற அரக்கர்களை அழித்த சிவபெருமானுடைய மாலைபோல் பூத்து இப்பொழுது மயங்கி வெற்றியைத் தரும் கார்காலம் வந்துவிட்டது. ஆதலின் நம் தலைவர் இன்றே வந்துவிடுவார். நீ வருந்த வேண்டாம்" என்று தலைமகளுக்குத் தோழி கூறினாள். 

Friday, 27 October 2017

நாலடியாா்

கைந்நிலை வரலாறு

கைந்நிலை என்ற நூல் 1931 ஆம் ஆண்டு பேராசிரியர் திரு. அனந்தராம ஐயர் அவர்களால் முதலில் அச்சியற்றி வெளிவந்ததாகத் தெரிகிறது. அவர்கள் முகவுரையில் "இந்நூற் பிரதி யொன்று எனக்குச் சிறிது காலத்திற்கு முன் கிடைத்தது. அது முதலிலும் சில பகுதியின்றியும், இருக்கும் செய்யுட்களிலும் சில பகுதி சிதைந்து பிழை விரவியும் இருந்தது. முன்பு வேறு சிலரிடத்திலிருந்த இந்நூல் ஏட்டுப் பிரதிகளைப் பார்த்திருக்கிறேன். அவையும் இதனைப் போலவே முதலிலும் இடையிலும் சில ஏடின்றியும் சிதைந்து பிழைபட்டுமே இருந்தன. அதனைப் பதித்து முற்றுப்பெறுங் காலத்து இராமநாதபுரம் சேது சமஸ்தான வித்துவான் உ. வே. ரா. இராகவையங் காரவர்கள் சென்னைக்கு வந்திருந்தார்கள் அவர்களிடம் இந்நூற் பிரதி யிருப்பதை யறிந்து கேட்டு வாங்கிப் பார்த்து அவ்வேட்டிலுள்ள படியே பதிப்பித்தேன்" என்று விளக்கமாக வரைந்திருக்கின்றனர்.

கைந்நிலை நூற்பதிப்பு முகவுரையில் "இந்நூல் சங்க மருவிய பதினெண் கீழ்க் கணக்கினுள் ஒன்று. அகப் பொருளையே விஷயமாகக் கொண்டுள்ளது. மாறோகத்து முள்ளி நாட்டு நல்லூர்க்காவிதியார் மகனார் புல்லாங்காடனாரால் ஒவ்வொரு திணைக்குப் பன்னிரண்டாக ஐந்திணைக்கும் இயற்றப்பட்ட அறுபது வெண்பாக்களையுடையது. பண்டை யுரையாசிரியர்களாற் சிற்சில இடத்து மேற்கோளாகக் காட்டப் பெற்ற பெருமை வாய்ந்தது" என்று குறித்துள்ளார் ஆசிரியர். 

Thursday, 26 October 2017

நான்மணிமாலை

நான்மணிமாலை
நான்மணிமாலை என்பது தமிழில் உள்ள 90 பிரபந்த வகைகளுள் ஒன்று. அந்தாதியாக நாற்பது செய்யுள்களில் அமையும் இப் பிரபந்த வகையில் வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம் என்னும் பாடல் வகைகள் மாறி மாறி அமைந்து வரும். இவ்வாறு நான்கு பா வகைகள் மாலை போல் கோர்வையாக அமைவதாலேயே இது நான்மணிமாலை எனப்படுகின்றது.

எடுத்துக்காட்டு தொகு

சுப்பிரமணிய பாரதியார் பாடிய விநாயகர் நான்மணிமாலையில் இருந்து முதல் நான்கு பாடல்களும், ஐந்தாம் பாடலின் பகுதிகளும் எடுத்துக் காட்டாகத் தரப்பட்டுள்ளன. முதல் பாடல் முடியும் சொல்லில் இரண்டாம் பாடல் தொடங்குவதையும் அவ்வாறே இரண்டாம், மூன்றாம், நான்காம் பாடல் முடியும் சொற்களில் மூன்றாம், நான்காம், ஐந்தாம் பாடல்கள் தொடங்குவதையும் காணலாம். முதல் நான்கு பாடல்களும் வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் ஆகிய செய்யுள் வடிவில் அமைந்திருப்பதையும், ஐந்தாம் பாடல் மீண்டும் வெண்பாவாக அமைந்துள்ளதையும் காணலாம்.

விநாயகர் நான்மணிமாலை தொகு
வெண்பா

சக்திபெறும் பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும்
சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா - அத்தனே!
நின்றனுக்குக் காப்புரைப்பார் நின்மீது செய்யுநூல்
இன்றிதற்குங் காப்பு நீயே.

Wednesday, 25 October 2017

பழமொழி நானூறு

பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு







இந் நூலிலுள்ள பாடல்களுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பழமொழியை அமைத்து, அதற்கு விளக்கம் கூறும் வகையில் ஆசிரியர் பாடியிருத்தலின், பழமொழி என்னும் சிறப்புப்பெயர் பெற்றது. மேலும் இந்நூல் நானூறு பாடல்களைக் கொண்டுள்ளது. இதனால் பழமொழி நானூறு" என்றும் இது குறிக்கப் பெறும். இதன் ஆசிரியர் மூன்றுறை அரையனார்.





நூல்


தற்சிறப்புப் பாயிரம்

பிண்டியின் நீழல் பெருமான் அடி வணங்கி,
பண்டைப் பழமொழி நானூறும் கொண்டு, இனிதா,
முன்றுறை மன்னவன், நான்கு அடியும் செய்து அமைத்தான்,
இன் துறை வெண்பா இவை.


அசோக மரத்தின் நிழலில் எழுந்தருளியிருக்கும் அருகக்கடவுளின் திருவடிகளைத் தொழுது பழைய பழமொழிகள் நானூறைத் தழுவி மூன்றுரை அரசர் இனிய பொருட்முறைகள் அமைந்த வெண்பாக்களாக்கி இந்நூற்பாட்டுக்களின் நான்கடியும் சுவை தோன்ற பாட்டமைத்தார். இறைவனை வணங்கி இப்பழமொழி நானூறும் பாடப்பெற்றன. 

Tuesday, 24 October 2017

சொல்

தொகுஇந்தப் பக்கத்தைக் கவனிக்கவும்வேறொரு மொழியில் படிக்கவும்
சொல்
மொழியில் பொருள் தரும் அடிப்படைக்கூறு
சொல் என்பது ஏதொன்றையும் சுருக்கமாய்க் குறிக்கும் அடிப்படை மொழிக் கூறு. சொல் என்றாலே தமிழில் சிறியது என்றும் பொருள் படுவது. உலகில் உள்ள மிகப்பெரும்பாலான மொழிகளில் சொற்களைக் கோர்த்து ஒரு சொற்றொடர் வழி ஒரு கருத்தோ செய்தியோ தெரிவிக்கப் படுகின்றது. சொல் என்பது ஒரெழுத்தாலோ, பலவெழுத்துக்களாலோ ஆக்கப்பட்டு ஒரு பொருளைத் தரும் மொழிக்கூறு. சொல்லைக் கிளவி, பதம் என்றும் கூறுவது உண்டு.

சொல்லைத் தொல்காப்பியம் ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்தொருமொழி, இரண்டு இறந்து இசைக்கும் பொதுமொழி எனப் பாகுபடுத்திப் பார்த்தது. [1]
சுமார் 1600 ஆண்டுகளுக்குப் பின்னர் மொழியை ஆராய்ந்த நன்னூல் ஈழெழுத்தொருமொழி என்னும் பகுப்பைக் கைவிட்டுவிட்டு 'தனியெழுத்துப் பதம்', 'தொடரெழுத்துப் பதம்' என இரண்டாகப் பாகுபடுத்திக் கொண்டுள்ளது.[2]
மேலும் நன்னுல் சொல்லை ஒருமொழி, தொடர்மொழி, பொதுமொழி எனப் பெயரிட்டுக்கொண்டு வேறு மூன்று வகையில் கண்டது. [3]

Monday, 23 October 2017

திருவிளையாடர் புராணம்

திருவிளையாடல் புராணம்
64 திருவிளையாடல்
திருவிளையாடல் பெயர் தொடர்புடைய கட்டுரைகளுக்கு திருவிளையாடல் (பக்கவழி நெறிப்படுத்தல்) பக்கத்தினை காணவும்.
திருவிளையாடற் புராணம் என்பது சிவபெருமானது திருவிளையாடல்களைக் கூறும் பரஞ்சோதி முனிவர் எழுதிய நூல் ஆகும். சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த திருவிளையாடல்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. [1]

ஆசிரியர் குறிப்பு தொகு

பரஞ்சோதி முனிவர் திருமறைக்காடு (வேதாரணியம்) எனும் ஊரில் சைவ வேளாளர் மரபில் மீனாட்சி சுந்தர தேசிகர் என்பாரின் மகனாகப் பிறந்தவர். மதுரையில் சற்குருவை ஏற்று சைவ சந்நியாசம் பெற்றார். மதுரை மீனாட்சியம்மை பரஞ்சோதி முனிவரின் கனவில் தோன்றி சிவபெருமானின் திருவிளையாடல்களை பாடும் படி கூறியமையால் இந்நூலை பரஞ்சோதியார் இயற்றியதாக நம்பப்படுகிறது. இவர் இயற்றிய வேறுநூல்கள்: 1)திருவிளையாடற்போற்றிக் கலிவெண்பா 2)மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி 3)வேதாரணிய புராணம்

இவரது காலம்:கி.பி.16 ஆம் நூற்றாண்டு என்பர்.

நூல் அமைப்பு தொகு

மதுரையில் சிவபெருமான் செய்த திருவிளையாடல்கள் பற்றி ஹாலாஸ்ய மகாத்மியம் என்னும் வடமொழி நூலில் சொல்லப்பட்டுள்ளது. வியாசர் இயற்றிய ஸ்கந்த புராணத்தில் இந்த லீலைகள் சொல்லப்பட்டுள்ளன. நந்தி தேவர் சனத்குமார முனிவருக்கு இந்த லீலைகள் பற்றி சொன்னார் என்றும், அதை வியாசருக்கு சனத்குமாரர் சொன்னார் என்றும், வியாசர் அதை ஸ்கந்தபுராணத்தில் எழுதினார் என்றும் வழங்கப்படுகிறது.

ஹாலாஸ்ய மகாத்மியத்தை பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழி பெயர்த்தார். அதை அப்படியே மொழி பெயர்க்காமல், தமிழுக்கே உரித்தான செய்யுள் நடையில் 3363 செய்யுள்களாக வடித்தார். இதில் முதல் 343 செய்யுள்கள் காப்பு, மதுரை நகர சிறப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. 344 வது செய்யுள் முதல் தான் பெருமானின் திருவிளையாடல் துவங்குகிறது.

திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன,.

மதுரைக்காண்டம் - 18 படலங்கள் கூடற்காண்டம் - 30 படலங்கள் திருவாலவாய்க காண்டம் - 16 படலங்கள்

Sunday, 22 October 2017

ஆகுபெயர்

ஆகு பெயர்
ஆகு பெயர் எனப்படுவது, ஒரு சொல் அதன் பொருளைக் குறிக்காமல் அச்சொல்லோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளைக் குறிப்பது. ஒன்றினது இயற்பெயர் அதனோடு தொடர்புடைய வேறொன்றுக்கு ஆகி வருவது. பெயர்ச்சொல்லின் ஒரு இயல்பாக வருவது. ஆகுபெயர் எல்லாமே பெயர்ச்சொல். (பெயர்ச்சொல் எல்லாம் ஆகுபெயராகாது.)

எடுத்துக்காட்டுகள் தொகு

நெல் அறுத்தான் - உண்மையில் அறுக்கப்பட்டது கதிர். நெல் என்பது இங்கு ஆகுபெயர் ஆனது.
வெற்றிலை நட்டான் - நடப்பட்டது வெற்றிலைக் கொடி. இங்கு வெற்றிலைக் கொடிக்காக வெற்றிலை ஆகுபெயர் ஆனது.
கண் என்னும் சொல் ஆகுபெயராய்க் கண்ணின் பார்வையை உணர்த்தும்.

பெண் இயலார் எல்லாம் கண்ணின் பொது உண்பர்
நண்ணேன் பரத்த நின் மார்பு [1]
இந்தத் திருக்குறளில் கண்ணால் உண்பர் என்பது கண் பார்வையால் உண்ணுதலை உணர்த்தி நிற்கும் ஆகுபெயர்.

வகைகள் தொகு

ஆகுபெயர்கள் பதினெட்டு வகைப்படும். அவையாவன

பொருளாகு பெயர்
சினையாகு பெயர்
காலவாகு பெயர்
இடவாகு பெயர்
பண்பாகு பெயர்
தொழிலாகு பெயர்
எண்ணலளவையாகு பெயர்
எடுத்தலளவையாகு பெயர்
முகத்தலளவையாகு பெயர்
நீட்டலளவையாகு பெயர்
சொல்லாகு பெயர்
காரியவாகு பெயர்
கருத்தாவாகு பெயர்
உவமையாகு பெயர்
அடை அடுத்த ஆகுபெயர்
தானியாகுபெயர்
இருபடியாகு பெயர்
மும்மடியாகு பெயர்

Saturday, 21 October 2017

பொருள் கோள்

பொருள்கோள்
தமிழில் வாக்கியங்கள் அமையும் பாங்கைக் கூறுவது சொல்லதிகாரம். தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் முதல் 7 இயல்களில் வழக்குத்தமிழில் வரும் வாக்கிய அமைதி பற்றியும், 8 & 9ஆம் இயல்களில் செய்யுள்-தமிழில் வரும் வாக்கிய அமைதி பற்றியும் இலக்கணம் என்னும் புலச் செய்திகள் தொகுத்துச் சொல்லப்பட்டுள்ளன.

செய்யுளில் அமைந்துகிடக்கும் வாக்கிய அமைதியை அண்வயப்படுத்தி வழக்குத்தமிழ் வாக்கியமாக்கிக்கொள்ளும் பாங்குக்குப் பொருள்கோள் என்று பெயர்.

இந்தப் பொருள்கோள் வகைகளில் சிலவற்றை அணி எனவும் காட்டுவர்.

பொருள்கோள் தொகு

செய்யுளில் இடம்பெறும் சொற்களை அமைந்துள்ளவாறே பொருள் கொண்டால் எல்லாச் செய்யுள்களுக்கும் சரியான பொருள் கிடைக்காது. யாப்பு முதலிய காரணங்களுக்காகச் சொற்களை முன்பின்னாக மாற்றுதல் முதலிய பல நிலைகளில் சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் பொருள் கொண்டால் அச்செய்யுளின் பொருள் விளங்கும். இவ்வாறு செய்யுளில் காணப்படும் தொடர்களைப் பொருள் கொள்ளும் முறையை விளக்குவது பொருள்கோள் ஆகும். பொருள்கோள் எட்டு வகைப்படும். அவை,

1) ஆற்றுநீர்ப் பொருள்கோள் 2) மொழிமாற்றுப் பொருள்கோள் 3) நிரனிறைப் பொருள்கோள் 4) விற்பூட்டு பொருள்கோள் (பூட்டுவிற் பொருள்கோள்) 5) தாப்பிசைப் பொருள்கோள் 6) அளைமறிப் பாப்புப் பொருள்கோள் 7) கொண்டுகூட்டுப் பொருள்கோள் 8) அடிமறி மாற்றுப் பொருள்கோள்

Friday, 20 October 2017

ஐந்தனை எமுபது

ஐந்தினை எழுபது


ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந் நூல் அமைந்துள்ளதால், ஐந்திணை எழுபது என பெயர் பெற்றது.இந் நூலை அருளியவர் மூவாதியார். கடவுள் வாழ்த்துஎண்ணும் பொருளினிதே எல்லாம் முடித்தெமக்குநண்ணுங் கலையனைத்தும் நல்குமால் - கண்ணுதலின்முண்டத்தான் அண்டத்தான் மூலத்தான் நலஞ்சேர்கண்டத்தான் ஈன்ற களிறு. நூல்1. குறிஞ்சிஅவரை பொருந்திய பைங்குரல் ஏனல்கவரி கடமா கதூஉம் படர்சாரல்கானக நாட! மறவல் வயங்கிழைக்(கு)யானிடை நின்ற புணை. 1மன்றத் துறுகல் கருங்கண முசுஉகளும்குன்றன நாடன் தெளித்த தெளிவினைநன்றென்று தேறித் தெளிந்தேன் தலையளிஒன்றுமற்(று) ஒன்றும் அனைத்து. 2மன்றப் பலவின் களைவிளை தீம்பழம்உண்டுவந்து மந்தி முலைவருடக் - கன்றமர்ந்(து)ஆமா சுரக்கும் அணிமலை நாடனையாமாப் பிரிவ(து) இலம். 3சான்றவர் கேண்மை சிதைவின்றாய் ஊன்றிவலியாகிப் பின்னும் பயக்கும் மெலிவில்கயந்திகழ் சோலை மலைநாடன் கேண்மைநயந்திகழும் என்னும்என் நெஞ்சு. 4பொன்னிணர் வேங்கை கமழும் நளிசோலைநன்மலை நாட! மறவல் வயங்கிழைக்குநின்னல(து) இல்லையால் ஈயாயோ கண்ணோட்டத்(து)இன்னுயிர் தாங்கும் மருந்து. 5காய்ந்தீயல் அன்னை! இவளோ தவறிலள்ஓங்கிய செந்நீர் இழிதரும் கான்யாற்றுள்தேன்கலந்து வந்த அருவி முடைந்தாடத்தாம்சிவப் புற்றன கண். 6வெறிகமழ் தண்சுனைத் தண்ணீர் துளும்பக்கறிவளர் தேமா நறுங்கணி வீழும்வெறிகமழ் தண்சோலை நாட! ஒன்(று) உண்டோஅறிவின்கண் நின்ற மடம். 7கேழல் உழுத கரிபுனக் கொல்லையுள்வாழை முதுகாய் கடுவன் புதைத்தயரும்தாழருவி நாடன் தெளிகொடுத்தான் என்தோழிநேர்வனை நெஞ்(சு) ஊன்று கோல். 8பெருங்கை இருங்களிறு ஐவனம் மாந்திக்கருங்கால் மராம்பொழில் பாசடைத் துஞ்சும்சுரும்(பு)இமிர் சோலை மலைநாடன் கேண்மைபொருந்தினார்க்கு |ஏமாப்(பு) உடைத்து. 9குறையொன்(று) உடையேன்மன் தோழி நிறையில்லாமன்னுயிர்க்(கு) ஏமம் செயல்வேண்டும் இன்னேஅராவழங்கு நீள்சோலை நாடனை நம்மில்இராவாரல் என்ப(து) உரை. 10பிரைசங் கொளவீழ்ந்த தீந்தேன் இறாஅல்மரையான் குழவி குளம்பில் துகைக்கும்வரையக நாட! வரையால் வரின்எம்நிரைதொடி வாழ்தல் இவள். 11வார்குரல் ஏனல் வளைலாயக் கிளைகவரும்நீரால் தெளிதிகழ் காநாடன் கேண்மையேஆர்வத்தின் ஆர முயங்கினேன் வேலனும்ஈர வலித்தான் மறி. 12இலையடர் தண்குளவி ஏய்ந்த பொதும்பில்குலையுடைக் காந்தள் இனவண்(டு) இமிரும்வரையக நாடனும் வந்தான்மற்(று) அன்னைஅலையும் அலைபோயிற்(று) இன்று. 13கொல்லைப் புனத்த அகில்சுமந்து கல்பாய்ந்துவானின் அருவி ததும்பக் கவினியநாடன் நயமுடையன் என்பதனால் நீப்பினும்வாடல் மறந்தன தோள். 142. முல்லைசெங்கதிர்ச் செல்வன் சினங்கரந்த போழ்தினால்பைங்கொடி முல்லை மணங்கமழ -வண்(டு)இமிரக்காரோ(டு) அலமரும் கார்வானம் காண்தொறும்நீரோ(டு) அலமரும் கண். 15தடமென் பணைத்தோளி! நீத்தாரோ வாரார்மடநடை மஞ்ஞை அகவக் - கடல்முகந்துமின்னோடு வந்த(து) எழில்வானம் வந்தென்னைஎன்னாதி என்பாரும் இல். 16தண்ணுறங் கோடல் துடுப்பெடுப்பக் காரெதிரிவிண்ணுயர் வானத்(து) உரும்உரற்றத் - திண்ணிதின்புல்லுநர் இல்லார் நடுங்கச் சிறுமாலைகொல்லுநர் போல வரும். 17கதழுறை வானம் சிதற இதழ்அகத்துத்தாதிணர்க் கொன்றை எரிவளர்ப்பப் பாஅஇடிப்பது போலும் எழில்வானம் நோக்கித்துடிப்பது போலும் உயிர். 18ஆலி விருப்புற்(று) அகவிப் புறவெல்லாம்பீவி பரப்பி மயில்ஆலச் - சூலிவிரிகுவது போலும்இக் கார்அதிர ஆவிஉருகுவது போலும் எனக்கு. 19இனத்த வருங்கலை பொங்கப் புனத்தகொடிமயங்கு முல்லை தளிர்ப்ப இடிமயங்கியானும் அவரும் வருந்தச் சிறுமாலைதானும் புயலும் வரும். 20காரிகை வாடத் துறந்தாரும் வாராமுன்கார்கொடி முல்லை எயிறீனக் - காரோ(டு)உடன்பட்டு வந்தலைக்கும் மாலைக்கோ எம்மின்மடம்பட்டு வாழ்கிற்பார் இல். 21கொன்றைக் குழலூதிக் கோவலர் பின்னுரைத்துக்கன்றமர் ஆயம் புகுதா - இன்றுவழங்கிய வந்தன்று மாலையாம் காணமுழங்கிவில் கோலிற்று வான். 22தேரைத் தழங்குகுரல் தார்மணி வாயதிர்ப்பஆர்கலி வானம் பெயல்தொடங்கிக் - கார்கொளஇன்(று)ஆற்ற வாரா விடுவார்கொல் காதலர்ஒன்றாலும் நில்லா வளை. 23கல்லேர் புறவின் கவினிப் புதன்மிசைமுல்லை தளவொடு போதவிழ - எல்லிஅலை(வு)அற்று விட்டன்று வானமும் உன்கண்முலைவற்று விட்டன்று நீர். 2425, 26 - இரண்டு பாடல்கள் மறைந்தவைகார்ப்புடைப் பாண்டில் கமழப் புறவெல்லாம்ஆர்ப்போ(டு) இனவண்(டு) இமிர்ந்தாட - நீர்த்தின்றிஒன்றா(து) அலைக்கும் சிறுமாலை மாறுழந்துநின்றாக நின்றது நீர். 27குருந்தலை வான்படலை சூடிச் சுரும்பார்ப்பஆயன் புகுதரும் போழ்தினான் ஆயிழாய்!பின்னொடு நின்று பெயரும் படுமழைகொலஎன்னொடு பட்ட வகை. 283. பாலைபொறிகிளர் சேவல் வரிமரல் குத்தநெறிதூர் அருஞ்சுரம்நரம் உன்னி - அறிவிட்(டு)அலர்மொழி சென்ற கொடியக நாட்டவலனுயர்ந்து தோன்றும் மலை. 29ஒல்லோம்என்(று) ஏங்கி உயங்கி இருப்பாளோகல்லிவர் அத்தம் அரிபெய் சிலம்(பு)ஒலிப்பக்கொல்களி(று) அன்னான்பின் செல்லுங்கொல் என

Thursday, 19 October 2017

கார்நாற்பது

கார் நாற்பது
கார் நாற்பது
ஆசிரியர் கண்ணங்கூத்தனார்
பண்டைக்காலத் தமிழரின் அக வாழ்க்கையின் அம்சங்களைத், தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காகப் பார்த்திருக்கும் தலைவியின் ஏக்கத்தினூடாகக் கார்காலப் பின்னணியில் எடுத்துக்கூறுகின்ற நூல் கார் நாற்பது. அகப் பொருள் சார்ந்தது. மதுரையைச் சேர்ந்த கண்ணங் கூத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. சங்கம் மருவிய காலத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று.
    புத்தகத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்!

கார் நாற்பது தொகு
ஆசிரியர்: மதுரைக் கண்ணங்கூத்தனார்



பாடல்: 01 (பொருகடல்...) தொகு
தோழிகூற்று;

பொருகடல் வண்ணன் புனைமார்பில் தார்போல்

திருவில் விலங்(கு)ஊன்றித் தீம்பெயல் தாழ

வருதும் எனமொழிந்தார் வாரார்கொல் வானங்

கருவருந்(து) ஆலிக்கும் போழ்து. (01)

(தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தியது)

Wednesday, 18 October 2017

ஆசாரக்கோவை

ஆசாரக்கோவைமனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இது ஒரு நீதி நூல். வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார்.

பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விடயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது. இவ்வொழுக்கங்களின் பட்டியல்:

1. ஆசார வித்து
2. ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்
3. தக்கிணை முதலியவை மேற்கொள்ளல்
4. முந்தையோர் கண்ட நெறி
5. எச்சிலுடன் தீண்டத் தகாதவை
6. எச்சிலுடன் காணக் கூடாதவை
7. எச்சில்கள்
8. எச்சிலுடன் செய்யக் கூடாதவை
9. காலையில் கடவுளை வணங்குக
10. நீராட வேண்டிய சமயங்கள்

Tuesday, 17 October 2017

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள் ஆகும்.

இவற்றில் மொத்தம் 18 நூல்கள் உள்ளன..

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
1. இன்னா நாற்பது

2. இனியவை நாற்பது

3. கார் நாற்பது

4. களவழி நாற்பது

5. ஐந்திணை ஐம்பது

6. ஐந்திணை எழுபது

7. திணைமொழி ஐம்பது

8. கைந்நிலை

9. திருக்குறள்

10. நாலடியார்

11. நான்மணிக்கடிகை

12. ஆசாரக்கோவை

13. திணைமாலை நூற்றைம்பது

14. பழமொழி நானூறு

15. சிறுபஞ்சமூலம்

16. முதுமொழிக்காஞ்சி

17. ஏலாதி

18. திரிகடுகம்

இவை அனைத்தும் வாழ்விற்கு தேவையான அறத்தையும் நீதி போதனையும் கூறுபவை ஆகும்.

Monday, 16 October 2017

இசையமுது

இசையமுது
மழையே மழையே வா வா – நல்ல
வானப் புனலே வா வா – இவ்
வையத் தமுதே வா வா
தகரப் பந்தல் தணதண வென்ன
தாழும் கூரை சளசள வென்ன
நகரப் பெண்கள் செப்புக் குடங்கள
நன்றெங் கும்கண கணகண வென்ன (மழையே மழையே…)
தகரப் பந்தல் தணதண வென்ன
தாழும் கூரை சளசள வென்ன
நகரப் பெண்கள் செப்புக் குடங்கள
நன்றெங் கும்கண கணகண வென்ன (மழையே மழையே…)
ஏரிகுளங்கள் வழியும்படி, நாடு
எங்கும், இன்பம் பொழியும்படி, பொடி
வாரித்தூவும் பூவும் காயும்
மரமும் தழையும் நனைந்திடும்படி (மழையே மழையே…)
தழையா வெப்பம் தழைக்கவும் மெய்
தாங்கா வெப்பம் நீங்கவும்
உழுவார் எல்லாம் மலைபோல் எருதை
ஒட்டிப் பொன்னேர் பூட்டவும் (மழையே மழையே…)

– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

சொல்பொருள் :

வானப்புனல் – மழைநீர்.  வையத்து அமுது – உலகின்
அமுதம்.  வையம் – உலகம்.  தகரப்பந்தல் – தகரத்தால்
அமைக்கப்பட்ட பந்தல்.  பொடி – மகரந்தப் பொடி.  தழை –
செடி.  தழையா வெப்பம் – பெருகும் வெப்பம்.  தழைக்கவும் –
குறையவும்.

ஆசிரியர் குறிப்பு :

பெயர் :  பாரதிதாசன்.
இயற்பெயர் :  சுப்புரத்தினம்.
சிறப்பு பெயர் :  புரட்சிக் கவிஞர், பாவேந்தர்.
எழுதிய நூல்கள் : பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு,
குடும்ப விளக்கு.
காலம் :  29.04.1891 முதல் 21.04.1964 வரை.
இவர் பாரதியின் கவிதை மீது கொண்ட காதலால், தம்முடைய
பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்.

Sunday, 15 October 2017

கண்ணதாசன் கவிதைகள்

கண்ணதாசன் கவிதைகள் (நூல்)
இந்த பக்கம் சில பிரச்சனைகளை கொண்டுள்ளது
கண்ணதாசன் கவிதைகள் என்னும் நூல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 35 கவிதைகளும் 2 காவியங்களும் 13 இசைப்பாடல்களும் அடங்கிய தொகுப்பு ஆகும். 1944ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் “திருமகள்” என்னும் இதழில் வெளிவந்த “காலை குளித்தெழுந்து” எனத் தொடங்கும் கவிதை முதல் 1959 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முதல் நாள் எழுதிய “கிழவன் சேதுபதி” என்னும் கவிதை வரை கண்ணதாசன் எழுதிய பல கவிதைகளில் இருந்து சில கவிதைகளை கவிஞர் நாக. முத்தையா தேர்ந்தெடுத்து எட்டு பிரிவுகளின் கீழ் தொகுத்திருக்கிறார். அவர் “சில சொற்கள்” என்னும் தலைப்பில் ஒரு முன்னுரையும் எழுதியிருக்கிறார். [1] “பதிப்பகத்தார் உரையை” காவியக்கழகத்தின் உரிமையாளர் கண்ணப்பா வள்ளியப்பன் எழுதியிருக்கிறார்.

கண்ணதாசன் கவிதைகள்
நூல் பெயர்: கண்ணதாசன் கவிதைகள்
ஆசிரியர்(கள்): கண்ணதாசன்
வகை: இலக்கியம்
துறை: கவிதை
இடம்: சென்னை
மொழி: தமிழ்
பக்கங்கள்: 328
பதிப்பகர்: காவியக் கழகம்
4 இராசகோபால நாயக்கன் சந்து
சிந்தாரிப்பேட்டை
சென்னை 600 002
பதிப்பு: மு.பதிப்பு: சனவரி 1959
உள்ளே தொகு

Saturday, 14 October 2017

ஓய்வும் பயனும்

ஓய்வும் பயனும் !
ஓய்வாக இருக்கையில் தம்பி – நீ
ஓவியம் வரைந்து பழகு !
தூய்மையோ டமைதி சேரும் ! – நன்கு
தோன்றிடும் உள்ள அழகு !
பாக்களும் இயற்றிப் பழகு – நல்ல
பாடலைப் பாடி மகிழ்வாய் !
தாக்குறும் துன்பம் யாவும் – இசைத்
தமிழினில் மாய்ந்து போகும் !
அறிவியல் ஆய்வு செய்வாய் – நீ
அன்றாடச் செய்தி படிப்பாய் !
செறிவுறும் உன்றன் அறிவு – உளச்
செழுமையும் வலிவும் பெறுவாய் !
மருத்துவ நூல்கள் கற்பாய் – உடன்
மனநூலும் தேர்ந்து கற்பாய் !
திருத்தமெய்ந் நூல்கள் அறிவாய் – வருந்
தீமையும் பொய்யும் களைவாய் !

– பெருஞ்சித்திரனார்

பொருள் :

மாணவர்களே! ஓய்வாக இருக்கும் நேரத்தில் ஓவியம் வரையக்
கற்றுக்கொண்டால் தூய எண்ணங்களும் அமைதியும் சேர்ந்து
உள்ளத்தின் அழகு வெளிப்பட, அது காரணமாக அமையும். தமிழில்
பாடல்கள் எழுதவும் பாடவும் பழகிக்கொள்ளுங்கள். இசைத்தமிழின்
இனிமையால் வாழ்வின் துன்பங்கள் தொலைந்துபோகும்.
அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளுங்கள். அன்றாட நிகழ்வுகளைச்
செய்தித்தாள் வாயிலாக அறிந்துகொள்ளுங்கள். உலக நிகழ்வுகளை
அறிவதன்மூலம் அறிவுத்திறன் மேம்படும். உள்ளம் வளமும்
வலிமையையும் பெற்றுச் சிறக்கும். மருத்துவ நூல்களையும் மனநல
நூல்களையும் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். அவை உடலையும்
உள்ளத்தையும் பாதுகாக்கத் துணைபுரியும்.
நீங்கள் வாழ்க்கைக்கு உதவும் தத்துவ நூல்களைக் கற்றால்,
அதன்வழித் தீமையும் பொய்மையையும் விடுத்து நல்வாழ்வு வாழலாம்.
எனவே, ஏட்டுக்கல்வியுடன் கலைஅறிவும் தொழிற்கல்வியும்
அறிவியற் சிந்தனையும் இருந்தால், நீங்கள் வாழ்வில் வெற்றி
பெறலாம். ஆதலால், ஓய்வுநேரத்தைப் பயனுள்ள வகையில்
செலவிட்டு வாழ்வில் வளம்பெறுங்கள்
ஆசிரியர் குறிப்பு :

பெயர் :  பெருஞ்சித்தரனார்.
ஊர் :  சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம்.
இயற்பெயர் : துரை மாணிக்கம்.
பெற்றோர் :  துரைசாமி – குஞ்சம்மாள்.
காலம் :  10.03.1933.
மறைவு :  11.06.1995.

இயற்றிய நூல்கள் :

கனிச்சாறு.
ஐயை.
கொய்யாக்கனி.
பாவியக்கொத்து.
பள்ளிப்பறவைகள்.
நூறாசிரியம்.
தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்கள்மூலம் உலகத்
தமிழரிடையே தமிழுணர்வு உருவாக்க இவர் பாடுபட்டார்.
நூற்குறிப்பு :

இப்பாடல், பள்ளிப்பறவைகள் என்னும் குழந்தைப்பாடல் தொகுப்பின்
இரண்டாம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்நூலிலுள்ள பாடல்கள்
பலவும் தென்மொழி, தமிழ்சிட்டு ஆகிய இதழ்களில் வெளிவந்தவை.
இந்நூல் குஞ்சுகளுக்கு, பறவைகளுக்கு, மணிமொழிமாலை என
முப்பிரிவாக அமைந்துள்ளது.

Friday, 13 October 2017

கெலன்கெல்லர்

ஹெலன் கெல்லர்
ஹெலன் கெல்லர் (Helen Keller) (ஜூன் 27, 1880- ஜூன் 1, 1968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண் ஆவார். இவர் இள வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவராவார்.

ஹெலன் கெல்லர்

1920இல் ஹெலன் கெல்லர்
பிறப்பு ஹெலன் ஆடம்ஸ் கெல்லர்
சூன் 27, 1880
துஸ்கம்பியா, அலபாமா, U.S.
இறப்பு சூன் 1, 1968 (அகவை 87)
ஆர்கன் ரிட்ஜ்
ஈஸ்டன், கனெடிகட், U.S.
தொழில் ஆசிரியர், ஆரசியல் ஆர்வளர், விரிவுரையாளர்
கல்வி ராட்சிலிஃப் கல்லூரி
கையொப்பம்
இவரின் அப்பா அமெரிக்க உள்நாட்டு போரின் பொழுது ராணுவத்தில் வேலை பார்த்தவர். பருத்தி சார்ந்த தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த நடுத்தர குடும்பம் அவர்களுடையது. ஆறு மாதத்திலேயே பேச ஆரம்பித்து விட்ட ஹெலன் கெல்லர் பதினெட்டு மாத சிறுமியாக இருக்கிற பொழுது மூளைக்காய்ச்சல் வந்தது. [1]

Thursday, 12 October 2017

ஐஞ்சிறுகாப்பியங்கள்

ஐஞ்சிறு காப்பியங்கள்
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன.

உதயண குமார காவியம், நாக குமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.

உதயணகுமார காவியம் தொகு

முதன்மை கட்டுரை: உதயணகுமார காவியம்
வத்தவ நாட்டரசன் சதானிகனுக்கும் அவன் மனைவி மிருகாவதிக்கும் பிறந்த உதயணனின் கதையை விளம்புவது இக்காவியம். 6 காண்டங்களில், 369 விருத்தப்பாக்களால் ஆனது இந்நூல். கந்தியார் (சமணப் பெண்துறவி) ஒருவரால் இயற்றப்பட்டது. பெயர் அறியக் கிடைக்கவில்லை.

இந்நூலில் உதயணன் நான்கு மனைவியரை மணந்து இறுதியில் துறவு நிலையை மேற்கொண்டதை அறிய முடிகிறது. கதையமைப்பு சிக்கலானதாகவும், இரு கதைத் தலைவர்களைக் கொண்டும் உள்ளது. பெயர் தான் காவியமே தவிர காவிய இயல்போ ஏற்றமோ நடை நலமோ சிறிதும் இல்லாதது. பெருங்கதை என்கிற நூலின் சுருக்கம் என்று கூட இதனைச் சொல்லலாம். இதன் காலம் கி.பி.15 ஆம் நூற்றாண்டு.

நாககுமார காவியம் தொகு

முதன்மை கட்டுரை: நாககுமார காவியம்
இதன் ஆசிரியரும் ஒரு சமணப் பெண்துறவியே. பெயர் அறியக் கிடைக்கவில்லை. 5 சருக்கங்களில் 170 விருத்தப்பாக்களில் நாகபஞ்சமியின் கதையை உரைக்கும் சிறுகாப்பியமாகும் இது. முழுக்க முழுக்க மணத்தையும் போகத்தையும் மட்டுமே பேசுகிறது. 519 பெண்களைக் கதையின் நாயகன் மணக்கிறான். காவிய நயமோ அமைதியோ சிறிதும் இல்லாத நூல் இது. காலம் கி.பி.16-ஆம் நூற்றாண்டு.

அழிந்து போன நூல் என்று கருதப்பட்ட இதனை சமண அறிஞர் ஜீவபந்து ஸ்ரீபால் அவர்களின் உதவியால் மு.சண்முகம் பிள்ளை பதிப்பித்துள்ளார்.

யசோதர காவியம் தொகு

முதன்மை கட்டுரை: யசோதர காவியம்
5 சருக்கங்களில் 320 விருத்தப்பாக்களால் ஆன இதன் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை. இராசமாபுரத்து அரசன் மாரிதத்தன் உயிர்களைப் பலியிட்டு வந்தான். அவனுக்கு உயிர்க்கொலை தீது என்று உணர்த்துவதற்காக எழுதப்பட்ட காப்பியம் இது. மறுபிறவிகள், சிற்றின்பத்தின் சிறுமை, பேரின்பத்தின் பெருமை, ஒழுக்கத்தின் உயர்வு போன்றவற்றை விவரிப்பது இந்நூல். இது ஒரு வடமொழி நூலின் தழுவல். எளிய நடையும் நயமான பாக்களும் உடைய நூல் இது. காலம் 13-ஆம் நூற்றாண்டு. இசை காமத்தைத் தூண்டும் என்பதையும், கர்மத்தின் விளைவுகளையும் எடுத்தியம்பும் இக்கதை உத்தரபுராணத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் புட்பந்தர் கதையின் தமிழ் வடிவம் என்றும் இதன் ஆசிரியர் வெண்ணாவலுடையார் வேள் என்றும் கூறுவோர் உண்டு.

நூலின் எளிமைக்கு உதாரணமாக ஒரு பாடல்:

ஆக்குவ தேதெனில் அறத்தை ஆக்குக
போக்குவ தேதெனில் வெகுளி போக்குக
நோக்குவ தேதெனில் ஞானம் நோக்குக
காக்குவ தேதெனில் விரதம் காக்கவே
சூளாமணி தொகு

முதன்மை கட்டுரை: சூளாமணி
இதன் ஆசிரியர் வர்த்தமான தேவர் எனப்படும் தோலாமொழித் தேவர். 12 சருக்கங்களில் 2131 விருத்தப்பாக்களால் இயற்றப்பட்டது இந்நூல். ஆருகத மகாபுராணத்தைத் தழுவியது. பாகவதத்தில் வரும் பலராமன், கண்னன் போன்று இக்காப்பியத்திலும் திவிட்டன் விசயன் என்னும் இரு வடநாட்டு வேந்தர்களின் வரலாறாக இந்நூல் உள்ளது. பாகவதமும் சூளாமணியும் கதை நிகழ்ச்சிகளில் ஓரளவு ஒத்து உள்ளன. சிரவணபெல்கோலா கல்வெட்டில் இந்நூல் பற்றிய குறிப்பு உள்ளது.

இந்நூலின் பாயிரம் தரும் குறிப்பின்படி, கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த அவனி சூளாமணி மாறவர்மன் என்னும் பாண்டியன் அவைக்களத்தில் அரங்கேறியது என்று தெரிகிறது. இது சிறுகாப்பிய வகையில் இருந்தாலும் பெருங்காப்பியப் பண்புகள் மிகுந்த நூலாகக் கருதப்படுகிறது.

நீலகேசி தொகு

முதன்மை கட்டுரை: நீலகேசி
நீலகேசித் தெருட்டு என்றும் வழங்கப்படும் நீலகேசி காவியம், குண்டலகேசி என்னும் பௌத்த காவியத்துக்கு எதிரான சமண காப்பியமாகும். ஆசிரியர் பெயர் அறியக் கிடைக்கவில்லை. 10 சுருக்கங்களில் 894 பாக்களால் ஆனது. கி.பி.பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. காப்பியத் தலைவி நீலி. பழையனூரில் பேயுருவில் இருந்து முனிச்சந்திரர் என்கிற சமண முனிவரால் பேய்மை நீங்கி அவருக்கே மாணவியாகவும் சமணத் துறவியாகவும் ஆகி பௌத்தர்களை வாதில் வென்ற கதையே இக்காப்பியம்.

Wednesday, 11 October 2017

பொியபுராணம்

பெரியபுராணம்
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார்.[1] அத்துடன் திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்கச்சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப்பெற்றுள்ளது.[2]

இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆனையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜன் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என பெரியபுராணத்தினை தொடங்கியதாக நம்பப்படுகிறது. இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது.[2]

காப்பியப் பகுப்பு தொகு

Tuesday, 10 October 2017

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் சிலம்பு- அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. இந்நூல் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றனையும் காணலாம். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்' என்றும் கூறுவர். இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது.

காலம் தொகு

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் .[1]
நற்றிணைப் பாடல் கண்ணகி வரலாற்றைக் குறிப்பிடுகிறது.[2]
மலையாள மொழி [3] கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தோன்றியது. மணிமேகலை வஞ்சி மூதூர் சென்று பல்வேறு சமயங்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தது மலையாளத்தில் அன்று. தமிழில். எனவே மணிமேகலை காலம் ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தையது.
புகார் நகரத்தில் சிவன்கோயில் இருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.[4] 276 ஊர்களிலிருந்த சிவன்கோயில்களைக் குறிப்பிடும் தேவாரம் இதனைக் குறிப்பிடவில்லை. எனவே புகார் நகரைக் கடல் கொண்டது தேவாரம் தோன்றிய 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தியது.
புகார் நகரத்தில் பலராமனுக்கும், கண்ணனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருந்ததைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.[5] 108 திருப்பதிகளைக் காட்டும் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூலில் இந்தக் கோயில் பற்றிய செய்தியே இல்லை. இதனாலும் சிலப்பதிகாரம் 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தியது என்பது உறுதியாகிறது.
கண்ணகி விழாவுக்குச் சென்றிருந்த இலங்கை மன்னன் கயவாகு தன் நாட்டு இலங்கையில் எழுப்பப்போகும் கோயிலிலும் எழுந்தருளும்படி, கண்ணகி தெய்வத்தை வேண்டிக்கொள்கிறான்.[6]
இந்தக் கயவாகு காலம் கி.பி. 114-136 [7]
தேவாரம், திவ்வியப் பிரபந்தம், கம்பராமாயணம், சீவகசிந்தாமணி முதலான நூல்கள் விருத்தப்பா என்னும் பா வகையைத் தோற்றுவிப்பதற்கு முன்னர் வழக்கில் இருந்த ஆசிரியப்பா [8] நடையில் அமைந்துள்ள சிலப்பதிகாரமும், மணிமேகலையும் அந்த நூல்களுக்கு முந்தியவை.[9]
எனவே இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
முதன்மை கட்டுரை: சிலப்பதிகாரம் தோன்றிய காலம்
சான்றுடன் மணிமேகலை காலம் :

1.நாகார்ச்சுனரால் உண்டாக்கப்பட்ட மகாயான பௌத்த மதக் கொள்கைகள் மணிமேகலையில் கிடையாது ஆனால் ஹீனயான பௌத்த மதக்கொள்கைகள் நிரம்பி இருப்பதனால் மணிமேகலை காலம் கி. பி இரண்டாம் நூற்றாண்டு என்கின்றனர்.

2. கிருதகோடி ஆசிரியர் பற்றி குறிப்பிடுவதால் மணிமேகலை கி.பி இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பம் என்றனர் ஆய்வாளர்கள். பல்வேறு சான்றுகளை ஒப்பீடு செய்து கால ஆராய்ச்சி என்னும் தன் நூலில் சி.இராச மாணிக்கனார் மணிமேகலை காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்பு என்றார். 3. சங்கப் புலவர் மாமூலனார் பிறந்த காலம் கி. மு நான்காம் நூற்றாண்டின் மத்திய பகுதி என கல்வெட்டு மற்றும் ஓலைச் சுவடி பாடல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது . மாமூலனார் காலத்தின் மூலம் கணக்கிட்டதில் மணி மேகலை காலம் கி. பி முதல் நூற்றாண்டின் ஆரம்ப காலம் என சந் தேகம் இல்லாமல் நிரூபிக்கபட்டுள்ளது தற்க்காலத்தில்.

இளங்கோவடிகள் தொகு

முதன்மை கட்டுரை: இளங்கோவடிகள்
இவர் இளவரசுப் பட்டத்தை விடுத்துத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். தன் அண்ணன் செங்குட்டுவனுடன் மலை வளம் காணச் சென்றபோது, கண்ணகியைப் பற்றிய செய்தியை சீத்தலைச் சாத்தனார் எனும் புலவர் மூலமாக அறிந்தார் இளங்கோ. கண்ணகியின் கற்பொழுக்கமும், பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் நேர்மையும் அரசியல் நடுநிலைமையும் அவரை மிகவும் கவர, மூவேந்தர்களுக்கும் உரிய தமிழின் உயர் காவியமாக சிலப்பதிகாரத்தை கவிபுனைந்தார் அவர்.

சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி மற்றும் கோவலனின் துணைவி மாதவி ஆகியோரது வரலாற்றை விவரிக்கின்றது. இதன் இரட்டைக் காப்பியமாகத் திகழும் மணிமேகலை, ஆடலரசி மாதவியின் மகள் மணிமேகலையின் வரலாற்றை உரைக்கும் காவியமாகும். இதனை எழுதியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் எனும் புலவர் ஆவார்.

Monday, 9 October 2017

திருவாரூர் நான்மணிமாலை

திருவாரூர் நான்மணிமாலை
திருவாரூர் நான்மணிமாலை [1] [2] [3] என்னும் நூல் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர் என்பவரால் இயற்றப்பட்ட நூல்களில் ஒன்று. திருவாரூர்ச் சிவபெருமானைப் போற்றிப் பாடும் பாடல்களைக் கொண்ட நூல் இது. நான்மணிமாலை என்னும் சிற்றிலக்கிய வகையில் காப்புச்செய்யுள் ஒன்று, வெண்பா, கட்டளைக் கலித்துறை, விருத்தம், ஆசிரியப்பா என்னும் யாப்பமைதி கொண்ட பாடல்கள் [4] மாறிமாறி அடுத்து வரும் 40 பாடல்கள் ஆகியவற்றைக் கொண்ட நூல் இது.

குமரகுருபரர் மதுரையிலிருந்து தருமபுரம் மீண்டார். வழியில் திருவாரூருக்கு வந்தார். அது தரும்புர ஆதீனத்தைத் தோற்றுவித்த குருஞான சம்பந்தருக்குக் குருவாக விளங்கிய கமலை ஞானப்பிரகாசர் வாழ்ந்த திருத்தலம். ஆதலால் இத் தலத்தை வழிபடும் நோக்கோடு இங்கு வந்தார். அப்போது இந்த நூலை இயற்றினார்.

நூல் தரும் செய்திகளில் சில தொகு

முசுகுந்த சக்கரவர்த்தி திருவாரூர் தியாகராசரை இந்திரனிடத்திலிருந்து பெற்றுவந்து திருவாரூரில் குடிகொள்ளச் செய்தார்.
திருமால் மூச்சு விடுவதால் வீதி விடங்கர் [5] அசைந்தாடுகிறார்.
திருமால் சிவனின் திருவடி கண்டது.
திருக்கடவூரில் எமனைச் சிவன் உதைத்தது.
சிவன் அன்பர்களுக்கு எவ்வாறு எளியன் ஆயினான் என்பது பற்றிக் கூறும் செய்திகள் - சாக்கிய நாயனாரிடம் கல்லடி பட்டார். கண்ணப்பரின் உமிழ்நீரை உவந்தது. அவரது செருப்புக் காலால் உதை பட்டது. சுந்தரருக்காக இருகாலாலும் நடந்து சென்று பரவையாரின் ஊஐடலைத் தீர்த்தது - முதலானவை.
அடிக்குறிப்பு தொகு

↑ திருவாரூர் நான்மணிமாலை நூல் - பாடல் மூலம்
↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1990, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினேழாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 96.
↑ குமரகுருபரர். ஸ்ரீ குமரகுருபர சிவாமிகள் பிரபந்தங்கள். சென்னை, கேசரி அச்சகம்: திருப்பனந்தாள் மடம், காசிவாசி சுவாமிநாத சுவாமிகள், (உ. வே. சாமிநாதையர் குறிப்புரையுடன்) நூல் பதிப்பு 1939,. பக். 221.
↑ ஒவ்வொன்றிலும் 10
↑ திருவாரூர் சிவபெருமானின் பெயர்களில் ஒன்று

Sunday, 8 October 2017

திராவிடமொழிக்குடும்பம்

திராவிட மொழிக் குடும்பம்
திராவிட மொழிக் குடும்பம் (dravidian language family) என்பது மரபு வழியாக இணைந்த கிட்டத்தட்ட 85 மொழிகளை உள்ளடக்கியதாகும்[1]. கிட்டத்தட்ட 217 மில்லியன் மக்கள் இம்மொழிகளைப் பேசுகின்றனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த முக்கிய மொழிகளான, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பன ஒன்றுடனொன்று நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதும், ஏனைய இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டு இருப்பதும் அறியப்பட்டுள்ளது. தென்னிந்திய மொழிகள் பற்றி ஆராய்ந்து, 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூலையெழுதிய கால்டுவெல் அடிகளார், 1856 இல், இந்த நான்கு மொழிகளுடன், தென்னிந்தியாவிலிருந்த, வேறு சில மொழிகளையும் சேர்த்துத் திராவிட மொழிகள் என்று பெயரிட்டார். பின்னர் வந்த ஆய்வாளர்கள், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் சில மொழிகள், மத்திய இந்தியா, வட இந்தியா, பாகித்தானிலுள்ள பலூச்சித்தான், நேபாளம் ஆகிய இடங்களில் வழங்கிவருவதை எடுத்துக் காட்டினர்.

திராவிடம்
புவியியல்
பரம்பல்: தெற்காசியா, அதிகமாக தென் இந்தியா
மொழி வகைப்பாடு: உலகிலுள்ள பெரிய மொழிக் குடும்பங்களில் ஒன்று
முதனிலை-மொழி: முதனிலைத் திராவிட மொழி
துணைப்பிரிவு:
வடக்கு
மத்தி
தெற்கு
எத்னாலாக் குறி: 17-1265
ISO 639-2 and 639-5: dra

Distribution of subgroups of Dravidian languages:

     வடக்கு
     மத்தி
     தென் மத்தி
     தெற்கு
வரலாறு தொகு

கிமு 1500 அளவில், ஆரியர் இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன், இந்தியா முழுவதும் திராவிட மொழிகளே வழங்கி வந்தது என்பது பல ஆய்வாளர்களது கருத்து.[2] திராவிட மொழிகளில் இருந்து இந்திய ஆரிய மொழிகளுக்குச் சென்றிருக்கும் நாமடங்கு ஒலியன்கள் முதலிய மொழியியல் சான்றுகள் கிடைத்தாலும் இதை அறுதியிட்டுக் கூறும் அளவிற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. சரஸ்வதி - சிந்து பள்ளத்தாக்குகளில் வளர்ச்சிபெற்ற நாகரிகமும் திராவிட நாகரீகமே என்ற கருத்தும் பல முன்னணி ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.[2] ஹரப்பா, மொஹெஞ்சதாரோ முதலிய சிந்துவெளிப் பள்ளத்தாக்கு நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்ட, இன்னும் வாசிக்கப்படாத எழுத்துக்களும், அக்காலத்தில் வழங்கிய திராவிட மொழிக்கானவையே என்பதும் அவர்கள் கருத்து. ஆனால் , பல ஆய்வாளர்கள் அக்கருத்தை மறுத்தும் வருகிறார்கள். சிந்துவெளிக் குறியீடுகள் எந்த மொழிக்கு உரியவை என்பது இன்னும் அறியப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

திராவிட மொழிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் அவற்றின் புவியியற் பரம்பலைக் கருத்திற் கொண்டு ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை:

தென் திராவிடம்
தென்-நடுத் திராவிடம்
நடுத் திராவிடம்
வட திராவிடம்
வகைப்படுத்தப்படாதவை
என்பனவாகும்.

இவற்றுள் தென் திராவிடப் பிரிவில் 34 மொழிகளும், தென்-நடுத் திராவிடப் பிரிவில் 21 மொழிகளும், நடுத் திராவிடப் பிரிவில் 5 மொழிகளும், வட திராவிடப் பிரிவில் 5 மொழிகளும், வகைப்படுத்தப் படாதவையாக 8 மொழிகளுமாக மொத்தம் 73 மொழிகள் கண்டறியப் பட்டுள்ளன. இவற்றுள் தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம் ஆகிய நான்கும் திராவிடப் பெருமொழிகளாகும்.தமிழையும் அதன் கிளைமொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளையும் ஒரு காலத்தில் தமிளியன் அல்லது தமுலிக் என்று வழங்கினர்.

சான்று:திராவிட மொழிகள், ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடநூல்,தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம், சென்னை.

Saturday, 7 October 2017

தேம்பாவணி

தேம்பாவணி
தேம்பாவணி என்னும் நூல் இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையான புனித யோசேப்பு மீது இயற்றப்பட்ட முதற் பெரும் செய்யுள் வகை நூலாகும். இந்நூல் இத்தாலிய நாட்டவரான வீரமாமுனிவர் (1680 - 1742) அவர்கள் தமிழில் திறம்பட ஆக்கிய நூல் எனப் புகழப்படுகிறது. கிறிஸ்தவ சமயத்தின் சுருக்கமென்றே இந்நூலை அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர்.

இத்தமிழ்க் காப்பியம் பிறமொழி நூல் ஒன்றில் வருகின்ற செய்திகளைத் தழுவி, தமி்ழ் நெறிக்கேற்ப எழுதப்பட்டதாகும். அதாவது, ஸ்பானிய நாட்டு ஆகிருத நகரில் வாழ்ந்த ஆகிர்த மரியாள் (María de Ágreda) என்னும் கன்னி மறைபொருளான இறைநகரம் (Mystical City of God) என்னும் நூலை, கன்னி மரியாவின் ஆணைப்படி எழுதியதாகக் கூறியுள்ளார்[1]. அந்த நூலில் இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசேப்பு பற்றிய செய்திகளும் உண்டு. ஆகிர்த மரியின் அந்நூலைத் தழுவி, தமிழ் மரபுக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் ஏற்ப யோசேப்பின் வரலாற்றை இயற்றியிருக்கிறார் வீரமாமுனிவர்.

தேம்பாவணியின் பொருள் தொகு

தேம்பா + அணி எனப் பிரித்து வாடாத மாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்துத் தேன் போன்ற இனிய பாடல்களின் மாலை என்றும் இதற்குப் பொருள் உண்டு. இயேசு நாதரை வளர்த்த தந்தையாகிய சூசையப்பரைத் தலைவராகக் கொண்டு இது பாடப்பட்டது. சூசையப்பருக்குத் தேம்பாவணி எனப் பெயரிட்டு இந்நூலில் பாடியுள்ளார்.

தேம்பாவணியின் அரங்கேற்றம் தொகு

'தேம்பாவணி' கி.பி. 1726 ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பலத்த எதிர்புகளுக்கிடையில் அரங்கேற்றப்பட்டது. பல புலவர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்குச் சளைக்காமல் பதிலளித்த வீரமாமுனிவரிடம் தமிழ்ப் புலவர்கள், "எல்லாம் தெரியுமெனக் கூறும்; பெஸ்கி அவர்களே! வானத்தில் எத்தனை நட்சத்திரம் இருக்கிறது; எனக் கூற முடியுமா?" என நையாண்டியாகக் கேட்டார்கள். பதட்டமின்றி "முப்பது மூன்று கோடி, முப்பதிமூன்று லட்டத்து, முப்பதிமூவாயிரத்து, முன்னூற்றிமுப்பதிமூன்று நட்சத்திரங்கள் சந்தேகமிருந்தால் எண்ணிப்பாருங்கள்" என்றதும், சபையில் சிரிப்பொலி எழும்பிப் பலர் முனிவரைப் பாராட்டினார்கள்.

"தேம்பாவணி"யின் சிறப்பைப் பாராட்டி மதுரைத் தமிழ்ச்சங்கம்; பெஸ்கிப் பாதிரியாருக்கு ராஜரிஷி என்ற பட்டம் அளித்து சிறப்பித்தது.

நூலின் அமைப்பு தொகு

தேம்பாவணி மூன்று காண்டங்களைக் கொண்டது. ஒவ்வொன்றிலும் 12 படலமாக 36 படலங்கள் உள்ளன. மொத்தம் 3,615 விருத்தப் பாக்கள் 90 சந்த வகைகளுடன் பாடப் பெற்றது தேம்பாவணி.

தமிழ் மரபு தொகு
தேம்பாவணி ஆசிரியர், வெளி நாட்டவரே ஆயினும், காப்பியக் கதைத் தலைவர் சூசை வாழ்ந்ததும் தமிழ் மண்ணில் இல்லை எனினும், காப்பியம் முழுக்கத் தமிழ் மணம் கமழ்வதாக, தமிழ்ப் பண்பாட்டில் தோய்ந்ததாகவே படைக்கப் பெற்றுள்ளமைக்குப் பல சான்றுகள் கூறலாம்.

பிற தமிழ்க் காப்பியங்களைப் போலவே, சீரிய உலகம் மூன்றும் என மங்கலச் சொற்களைப் பெய்தே, தொடங்குகிறார் ஆசிரியர். இறைவனை வணங்க முற்படும் போது, மேனாடுகளில் வழங்கும் கிறித்தவ மரபுகளைச் சாராது, தமிழ் மரபையே சார்ந்து, இறைவனது பாதங்களையே முதலில் வணங்குவதையும், இறைவனது பாதங்களை மலராகக் காண்பதையும் இங்குக் காண்கிறோம். இறைவனுக்கு வாகனங்களை உரிமை செய்து பாடுவன தமிழகச் சமயங்கள். அத்துடன், இறைவனுக்குரிய கொடிகளாகச் சிலவற்றைக் குறிப்பதும் இங்குள்ள சமய மரபு. இதனைப் பின்பற்றி வீரமாமுனிவரும் திருமகன் இயேசுவை மேக வாகனத்தில் வருபவராகவும், அவரது முன்னோரான தாவீது அரசனைச் சிங்கக் கொடியோன் என்றும் பாடுகிறார்.

மேலும் இறைவனது திருமேனிக்கு வண்ணம் (நிறம்) குறித்துப் பாடுவது, இறைவனைத் தரையில் தலைபட வணங்குவது, கை கூப்பி வணங்குவது, மலர்கள் தூவி வழிபாடு செய்வது, பல்வகை விளக்குகளை ஆலயத்தில் ஏற்றுவது, தேர்த்திருவிழா காண்பது முதலிய பல தமிழ்ச் சமய மரபுகளைத் தம் காப்பியத்தில் வீரமாமுனிவர் இணைத்துள்ளதைக் காண்கிறோம். ஓரிரு இடங்களில் தாம் கூறவரும் செய்திகளுக்கு உவமையாகத் தமிழ்நாட்டுப் புராணச் செய்திகளையும் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு தமிழ் மரபுக் கேற்ப, தம் காப்பியத்தைக் கவிஞர் அமைத்துள்ளமை புலனாகிறது.

தமிழ் இலக்கியத் தாக்கம் தொகு
வீரமாமுனிவர் வெளிநாட்டவராக இருந்தும் தமிழ் மரபைக் கருத்தாகக் கடைப்பிடிப்பது சிறப்பு. அவர் வருணிக்கின்ற பாலத்தீன நாடும், எருசலேம் நகரும் தமிழ் மண்ணின் மணம் கமழ்வதாகவே உள்ளன. முன்னோர் மொழியைப் பொன்னேபோல் போற்றிய வீரமாமுனிவர் திருவள்ளுவர், சீவக சிந்தாமணி பாடிய திருத்தக்கதேவர், கம்பர், மாணிக்கவாசகர் போன்றோரின் நடை, சொல், உவமை, கருத்து போன்றவற்றைச் சூழலுக்குப் பொருத்தமாக எடுத்தாள்கிறார்.

எடுத்துக்காட்டாக, கபிரியேல் வானதூதன் கடவுளின் நற்செய்தியை மரியாவிடம் உரைத்தபோது, மரியா கலக்கமுற்றதையும் அக்கலக்கத்தை வானதூதர் உணர்ந்தறிந்தார் என்பதையும் விளக்கவந்த வீர்மாமுனிவர்

பளிங்கு அடுத்தவ

Friday, 6 October 2017

முதுமாெழிக்காஞ்சி

வாழ்வியல் சிந்தனைகள்
முனைவர் மு. பழனியப்பன்
 முதுமொழிக் காஞ்சி
முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. 'மூதுரை, முதுசொல்' என்பனவும் இப் பொருள் தருவன. காஞ்சி என்பது பல்வேறு நிலையாமைகளைக் குறித்தது என்பர் தொல்காப்பியர். மேலும், முதுசொல் (தொல். பொருள். 385), முதுமொழி(தொல். பொருள். 467, 468, 480), முதுமை (தொல்.பொருள். 77) என்பவற்றிற்கு அவர்தரும் விளக்கத்திற்கும் 'முதுமொழிக் காஞ்சி' நூற் பொருளுக்கும் தொடர்பு ஒன்றும் இல்லை. ஆயினும், தொல்காப்பியரது சூத்திரக் கருத்தையும் முதுகாஞ்சிபற்றி நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும் எழுதியஉரைக் கருத்துகளையும் ஒட்டியே திவாகர நிகண்டில் முதுமொழிக் காஞ்சிக்கு விளக்கம் தரப்படுகிறது.

கழிந்தோர் ஏனை ஒழிந்தோர்க்குக் காட்டிய
முதுமை ஆகும் முதுமொழிக்காஞ்சி (X. 107)

என்பது திவாகரம். இவ் விளக்கம் முதுமொழிக்காஞ்சி நூலுள் பொதிந்த பொருளைத் தெளிவாக உணர்த்தவில்லை.

புறப்பொருள் வெண்பாமாலையில்'முதுமொழிக் காஞ்சி' என்று ஒரு துறை அமைந்துள்ளது. இதனை, 'மூதுரை பொருந்திய முதுமொழிக் காஞ்சி' என்றுதொகைச் சூத்திரத்தில் சுட்டியதோடு, பின்னர்,

பலர் புகழ் புலவர் பன்னினர் தெரியும்
உலகியல் பொருள் முடிவு உணரக் கூறின்று
என்று விளக்கியும் ஆசிரியர் உரைத்துள்ளார். உலகியல் உண்மைகளைத் தெள்ளத் தெளிந்த புலவர்பெருமக்கள் எடுத்து இயம்புவது என்னும் இலக்கணம் 'முதுமொழிக்காஞ்சி' என்னும் நூற்பொருளுக்குப் பொருந்துவதாகும்.

முதுமொழிக் காஞ்சித் துறை பற்றிப் புறநானூற்றில் ஐந்து பாடல்கள் உள்ளன (18, 27, 28, 29,74). இந்நூலின் உரைகாரர் புறப்பொருள் வெண்பாமாலையைப் பின்பற்றியே துறைக்குறிப்பும் விளக்கமும் (18, 74,உரை) தந்துள்ளார். இவர் தரும் விளக்கமும் முதுமொழிக் காஞ்சியின் இயல்போடு பொருந்தும்.

காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும் குறிக்கும். பலமணிகள் கோத்த காஞ்சி அணி போல முதுமொழிகள் பல கோத்தநூல் முதுமொழிக் காஞ்சி எனப் பெயர் பெற்றது என்று கருதுவாரும் உண்டு. அங்ஙனம் கொள்ளின், முதுமொழிக் காஞ்சி என்பது அறிவுரைக் கோவை என்னும் பொருள் பயந்து நிற்கும்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைத் தொகுத்து உரைக்கும் வெண்பாவில் 'காஞ்சி' என்னும் பெயரே காண்கிறது . இதில் குறித்த காஞ்சி முதுமொழிக்காஞ்சி என்பதே சான்றோர் கொள்கை. 'இன்னிலையகாஞ்சி' என்று அடைமொழி கொடுத்து இப்பாடல் உரைப்பது, நூலின் தெளிவு முதலியன கருதிப் போலும்!
முனைவர் மு.பழனியப்பன்
இணைப்பேராசிரியர், மற்றும் தமிழ்த்துறைத்தலைவர்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூர
திருவாடானை
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று முதுமொழிக்காஞ்சி என்னும்ஆகும். இந்நீதி நூல் ஒற்றை அடியால் உலக நீதிகளை எடுத்துரைக்கின்றது, இதன் யாப்பினைக் குறள் வெண் செந்துறை சா்ந்தது என்பர் இலக்கண ஆசிரியர்கள்.
முதுமொழி என்றால் பழமொழி என்று பொருள். காஞ்சி என்றால் அது திணையையும் குறிக்கலாம். அது மகளிர் அணியும் ஒருவகை அணியையும் குறிக்கலாம். காஞ்சித்திணை – தொல்காப்பியர் காலத்தில் நிலையாமை பற்றி வந்த புறத்திணையாகும். தொல்காப்பியத்தின் பிற்கால எல்லையில் தோன்றிய இந்நூலும் காஞ்சியை நிலையாமையை உரைப்பதாகவே கொண்டு அறம் உரைத்துள்ளது. காஞ்சி என்றால் பெண்கள் இடையில் அணியும் ஒருவகை அணிகலனாகும். பல மணிகள் கோர்த்து அவ்வணிகலன் செய்யப்படுவதைப்போல இந்நூலும் ஒரு நூறு மணிகளைக் கோர்த்துப் பாடப்பெற்றுள்ளது, இதனை இயற்றியவர் மதுரைக் கூடலூர்க் கிழார் ஆவார். கூடலூர்க் கிழார் என்ற பெயரில் இரு புலவர்கள் சங்ககாலத்தில் இருந்துள்ளனர். ஒருவர் இவர். மற்றொருவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் ஆவார். பின்னவரை விட இவர் வேறானவர். கூடலூரில் இருந்துப் பின்னர் மதுரைக்கு இடம்பெயர்ந்ததன் காரணமாக இவர் மதுரைக் கூடலூர்க் கிழார் எனப்பெற்றுள்ளார். ஒரு தலைப்பின் கீழ்ப் பத்துப்பாடல்கள் என்ற அமைப்பி்ல் நூறு பாடல்களால் செய்யப்பெற்றுள்ளது இந்நூல்.
வாழ்வியல் அறங்களை உரைக்கும் முதுமொழிக்காஞ்சி எளிமையான சொற்களால் உயர்வான இரு அறங்களை ஒற்றை அடியில் காட்டி, ஓர் அறத்தைவிட மற்றது மேம்பட்டது என்ற அமைப்பில் அறங்களின் பெருமைகளை எடுத்துக்காட்டுகின்றது,. இவ்வகையில் பல்வகை அறமுறைக்கும் முக்கியமான நூல் முதுமொழிக்காஞ்சியாகின்றது. இம்முதுமொழிக்காஞ்சி தான் எழுந்த காலத்திற்குத் தேவையான வாழ்வியல் அறங்களை எடுத்தியம்பியுள்ளது என்றாலும் அவ்வறங்கள் இன்றைய வாழ்க்கைக்கும் பொருந்துவனவாக உள்ளன என்பது கருதத்தக்கது. இன்றைய வாழ்வின் பல சிக்கல்களுக்கு முதுமொழிக்காஞ்சியின் அறநெறிகள் விடை காட்டுகின்றன.
வாழ்க்கையை நெறிப்பட வாழும் இனிய நடைமுறை வாழ்வியல் எனக்கொள்ளலாம். மனித வாழ்வியலை இல்லறம், துறவறம் என இருவகையாகப் பிரிக்கலாம். இல்லறவாதிகளுக்கும், துறவிகளுக்கும் தனித்தனியாக வாழும் முறைகள் இலக்கியங்களால் வகுக்கப்பெற்றுள்ளன. இந்நூலில் இல்லற வாழ்வு சிறக்க நன்னெறிகளைத் தொகுத்து மதுரைக் கூடலூர்க் கிழார் உரைக்கின்றார். தமக்கென வாழாமல் பிறர்க்குரிமையாக வாழ்வது என்பது மனித வாழ்வின் வெற்றியாகும். துறவற நெறிகள் இவ்விலக்கியத்தில் தவ நெறிகளாகக் காட்டப்பெற்றுள்ளன.
‘‘ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்’’ (திருக்குறள். 214)
என்று வள்ளுவர் ஒத்துவாழும் வாழ்க்கையே சிறப்பானது என்கிறார். அப்படி ஒத்திசைந்து வாழாதவர்கள் இறந்தவர்கள் என்று குறிப்பிடுகின்றார். எனவே வாழ்க்கை என்பது தானும் பழிப்பில்லாமல் வாழ்ந்து, தன்னைச் சார்ந்தவர்களையும் வளர்த்து, தன் சமுதாயத்தையும் வளர்க்கும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகக் கருதப்படும். அதற்கான நெறிகள் பற்பல நூல்களில் சொல்லப்பெற்றுள்ளன. முதுமொழிக்காஞ்சியில் சொல்லப்பெற்றுள்ள வாழ்வியல் சிந்தனைகளை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.
முதுமொழிக் காஞ்சியும் வாழ்வியல் சிந்தனைகள்
‘‘வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான்’’ (தண்டாப்பத்து, 5) என்று வாழ்க்கைக்கு இலக்கணம் வகுக்கின்றது முதுமொழிக்காஞ்சி. இதற்கு உரை வரைந்த உரையாசிரியர்கள் சூழ்ச்சி என்பதற்கு ஆராய்ச்சி என்று பொருள் எழுதுகிறார்கள். வாழ்வில் செல்வாக்கு வேண்டுபவன் தன் செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும் என்பதுதான் இவ்வடிக்குச் சொல்லப்பெற்ற பொருளாகும். சூழ்ச்சி என்பதற்குக் கழகத்தமிழ் அகராதி உபாயம். தந்திரம் என்றும் சில பொருள்களைத் தருகின்றது. (ப.483) தண்டான் என்பதற்கு நீங்கான் என்பது அவ்வகராதி தரும் பொருளாகும். இவ்விரு சொற்களையும் இணைத்துப் பொருள் ்கொள்வதானால் வாழ்வில் வெற்றி பெற எண்ணுபவன் தன் செய்ல்களை ஆராய்ந்துச் செய்யவேண்டும் என்று பொருள் கொள்ளலாம்.
‘வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று’’ (அல்ல பத்து,7) என்று தான் வாழாமல் வருந்தி தான் சேர்த்துவைத்தப் பொருளைச் செலவழிக்காமல் வரு்ந்தி வாழும் வாழ்க்கை வாழ்க்கையாகாது. எனவே திருப்தி மிக்க வாழ்க்கை என்பது தானும் வாழ்ந்துத் தனக்கு உரியவர்களும் வாழ தன் பொருளைச் செலவழிப்பது என்பதுதான்.
இவ்வாறு வாழ்க்கை பற்றிய நேரடி வரையறைகள் முதுமொழிக் காஞ்சியில் இடம்பெற்றுள்ளன. இவ்வகையில் முதுமொழிக் காஞ்சி மனிதவாழ்வியலுக்கு வழிகாட்டும் நூல் என்பதில் ஐயமில்லை.
முதுமொழிக்காஞ்சியின் வாழ்வியல் சிந்தனைகளைத் தனிமனித வாழ்வியல் சிந்தனைகள், குடும்பம் வாழ்வியல் பற்றிய சிந

Thursday, 5 October 2017

புறநானூறு

புறநானூறு
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
எட்டுத்தொகை பத்துப்பாட்டு
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் பா உ தொ
புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை.பாக்களின் அடி வரையறை 4 அடி முதல் 40 அடி வரை உள்ளன. புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன. இதனை ஜி. யு. போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்

பாடியவர்கள் தொகு

இந் நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 150-க்கும்மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. இவர்களனைவரும் ஒரே சமூகத்தையோ நாட்டையோ சார்ந்தவர்கள் அல்ல. அரசன் முதல் எளிய குயவன்மகள் வரை பல்வேறு நிலைகளில் இருந்த ஆடவரும் பெண்டிருமான புலவர்கள் பாடியுள்ளனர். புலவர் அரசர்களைப் பாடியதை ”அவனை அவர் பாடியது” என்று சொல்வதன் மூலம் புலவர்களுக்கிருந்த செல்வாக்கும் மதிப்பும் புலனாகிறது.

நூல் அமைப்பு தொகு

இந்நூலில் பாடல்கள் தொகுக்கப்படும்போது ஒருவகை இயைபு கருதி, முதலில் முடிமன்னர் மூவர், அடுத்து குறுநில மன்னர்,வேளிர் ஆகியோரைப் பற்றிய பாடல்களும் அடுத்து போர்ப் பற்றிய பாடல்களும், கையறுநிலைப்பாடல், நடுகல், மகளிர் தீப்பாய்தல் என்று தொகுத்துள்ளனர். புறப்பொருள் கருத்துகளைத் தழுவி பாடப்பட்ட இந்நூலில் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் திணை, துறை, பாடினோர், பாடப்பட்டோர், பாடப்பட்ட சூழல் போன்ற குறிப்புகள் உள்ளன

புறப்பொருள் தொகு

அகப்பாடல்கள் ஐந்திணை ஒழுக்கங்களைக் குறித்தது போல, புற ஒழுக்கங்களைக் குறித்து அமைந்த பழங்கால வாய்பாட்டுப் பாடல் நமக்கு விளக்குகிறது.

பாடல்:

வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் - உட்கா
தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம்.[1]
இப்புற ஒழுக்கங்களை வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, என்ற எட்டுத் திணைகளாகக் குறிப்பிடுகின்றன. இதில் பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய திணைகளும் அடங்கும். திணையின் உட்பிரிவு துறை எனப்படுகிறது.

புறப்பாடல்கள் புற ஒழுக்கங்களான போர்த்திறம், வள்ளல் தன்மை, மகளிர் மாண்பு, சான்றோர்களின் இயல்பு போன்றவற்றைக் குறிப்பிடுகின்றன.

புறநானூறு வழி அறியலாகும் செய்திகள் தொகு

அக்காலத் தமிழ் மக்களின் அரசியல், சமூகம், பொருளாதரம், கல்வி, நாகரிகம், கலை வளர்ச்சி, வீரம், கொடை, ஆடை, அணிகலன் பழக்க வழக்கங்கள், வாணிபம் போன்ற பல செய்திகளை புறநானூறு வழி அறியலாம்.

சமூக நிலை தொகு

பெண்கள் மங்கல அணி அணிதல், இறந்தவரைத் தாழியில் கவித்தல், நடுகல் நடுதல், நட்ட கல்லைச் சுற்றி மயிற்பீலி அணிவித்து மது வார்த்தல், கணவனை இழந்த பெண்கள் அணிகளைக் களைந்து, கைம்மை நோன்பு நோற்றல், உடன்கட்டையேறல் போன்ற பழக்க வழக்கங்களையும் 10 வகை ஆடைகளையும், 28 வகை அணிகலன்களையும், 30 படைக்கலக்கருவிகளையும், 67வகை உணவுகளையும் எடுத்து இயம்புகின்றன. பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு கையில் வேல் கொடுத்து போருக்கு அனுப்பும் மகளிர், முறத்தால் புலியை விரட்டும் மகளிர் எனப் பெண்களின் வீரத்தையும் போற்றுகின்றன. அக்கால சமூக நிலையைக் காட்டும் கண்ணாடி என புறநானூறு விளங்குகிறது.

வரலாற்றுக் குறிப்புகள் தொகு

புறநானூற்றுப் பாடல்களில் ஏராளமான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. பாண்டியன் நெடுஞ்செழியன் முதலான 15 பாண்டிய மன்னர்களையும், கரிகாற்சோழன் போன்ற 18 சோழ அரசர்களையும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் போன்ற 18 சேர அரசர்களையும

Wednesday, 4 October 2017

திருமந்திரம்

திருமந்திரம்
திருமந்திரம் என்பது திருமூலரால் எழுதப்பட்ட ஒரு தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். இதன் காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு.[1] இது ஒன்பது தந்திரங்களைக் (இயல்கள்) கொண்டது. மூவாயிரம் பாடல்கள் உடையது. சராசரியாக ஒவ்வொரு பாடலும் நான்கு வரிகளாகவும், ஒவ்வொரு வரியும் நான்கு சொற்களைக் கொண்டதாகவும், மொத்தம் 192000 சொற்களைக் கொண்டது. திருமந்திரம் எடுத்துக் கொண்ட பொருளை எளிய சொற்களால் அனைவருக்கும் புரியும்படி திருக்குறளைப்போல் சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறுகிறது.

சைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி
சைவத் திருமுறைகள்


1, 2, 3 - தேவாரம்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

4, 5, 6 - தேவாரம்
திருநாவுக்கரசு நாயனார்

7 - தேவாரம்
சுந்தரமூர்த்தி நாயனார்

8 - திருவாசகம், திருக்கோவையார்
மாணிக்க வாசகர்

9 - திருவிசைப்பா, திருப்பல்லாண்டு
திருவிசைப்பா திருமாளிகைத் தேவர் சேந்தனார் கருவூர்த் தேவர் பூந்துருத்தி நம்பிகாடநம்பி கண்டராதித்தர் வேணாட்டடிகள் திருவாலியமுதனார் புருடோத்தம நம்பி சேதிராயர் திருப்பல்லாண்டு சேந்தனார்
10 - திருமந்திரம்
திருமூலர்

11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)
ஆலவாய் உடையார் காரைக்கால் அம்மையார் ஐயடிகள் காடவர்கோன் சேரமான் பெருமான் நக்கீரர் கல்லாடர் கபிலர் பரணர் இளம்பெருமான் அதிராவடிகள் பட்டணத்தடிகள் நம்பியாண்டார்
12 - பெரியபுராணம்
சேக்கிழார்

 சைவம் வலைவாசல்

வேதம்,ஆகமம் ஆகிய இரண்டிற்கும் திருமந்திரம் விளக்கம் தருகிறது. இது சைவ ஆகமம் என்றும் போற்றப்படுகிறது. திருமந்திரம் சைவத் திருமுறைகள் பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாக பெரியோர்களால் வைக்கப்பட்டுள்ளது. தோத்திரத்திற்குத் திருவாசகம் சாத்திரத்திற்குத் திருமந்திரம் எனச் சான்றோர் கூறுவர். மேலும் சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.

திருமந்திரத்தின் முதலாவதாக வைக்கப்பட்டுள்ள ‘கடவுள் வாழ்த்து‘ என்பதன் முதலாவது பாட்டுப் பின்வருமாறு அமைந்துள்ளது;

ஒன்றவன் தானே, இரண்டவன் இன்னருள்,
நின்றனன் மூன்றினுள், நான்கு உணர்ந்தான், ஐந்து
வென்றனன், ஆறு விரித்தனன், ஏழும்பர்ச்
சென்றனன், தான் இருந்தான் உணர்ந்து எட்டே

திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் இதற்குப் பலராலும் உரைகள் எழுதப்பட்டு வந்துள்ளது. இதனால், பல பாட்டுக்களில் கூறப்பட்டிருப்பவைக்கு, வேறுபட்ட, முரண்பட்ட கருத்துக்கள் கொடுக்கப்பட்ட நிலைதான் காணப்படுகிறது.[2]

Tuesday, 3 October 2017

ஏலாதி

ஏலாதி
பதினெண்கீழ்க்கணக்கு நூல்
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
எட்டுத்தொகை பத்துப்பாட்டு
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் பா உ தொ
பதினெண்கீழ்க்கணக்கு நூல் தொகுப்பில் அடங்கிய பண்டைத் தமிழ் நீதி நூல்களில் ஒன்று ஏலாதி. சமண சமயத்தைச் சேர்ந்தவரான கணிமேதாவியார் என்பவரால் எழுதப்பட்டது இந்நூல். திணைமாலை நூற்றைம்பது என்னும் அகப்பொருள் நூலை இயற்றியவரும் இவரே. ஏலாதியில் 81 பாடல்கள் உள்ளன.

நூல் பெயற்காரணம் தொகு

இந்நூலின் பெயர் ஏலத்தை முதலாகக் கொண்ட இலவங்கம்,சிறு நாவற் பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட ஏலாதி என்னும் மருந்து ஒன்றின் பெயரை அடியொற்றி ஏற்பட்டது. இந்நூலிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் அதன் கருப்பொருள் தொடர்பில் ஆறு நீதிகளைக்கூறி மக்களின் ஒழுக்கக் குறைவுக்கு மருந்தாவதால் இந்நூலுக்கும் ஏலாதி என்ற பெயர் ஏற்பட்டது.

எடுத்துக்காட்டு தொகு

இடையின் அழகோ, தோளின் அழகோ அல்லது ஈடு இல்லாத வேறு அழகுகளோ, நடை அழகோ, நாணத்தினால் ஏற்படும் அழகோ, கழுத்தின் அழகோ உண்மையான அழகு ஆகா. எண்ணும், எழுத்தும் சேர்ந்த, அதாவது கல்வியினால் ஏற்படும் அழகே அழகு என்னும் பொருள்பட வரும் ஏலாதிப் பாடல்களில் ஒன்று இது:

இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடில் வனப்பும்
நடைவனப்பும் நாணின் வனப்பும் - புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ(டு)
எழுத்தின் வனப்பே வனப்பு.
இவற்றையும் பார்க்கவும்

Monday, 2 October 2017

seam moli

 World Tamil Conference
This article is about the occasional conferences organised by the International Association for Tamil Research. It is not to be confused with World Classical Tamil Conference 2010.
The World Tamil Conference (Tamil: உலகத் தமிழ் மாநாடு) is a series of occasional conferences to discuss the social growth of the Tamil language. Each conference is attended by thousands of Tamil enthusiasts around the world. Conferences are hosted in various cities in India, as well as world cities with a significant Tamil population. The conference aims in promoting the heritage of Tamil language.

A similar conference called World Classical Tamil Conference 2010, unapproved by the International Association for Tamil Research, was held in Tamil Nadu conducted by the Dravida Munnetra Kazhagam under the leadership of M. Karunanidhi. Not all agreed with the academic and intellectual rigour of the latter event. Despite these criticisms upholding such a huge event portraying the value of Tamil language and culture is being appreciated vastly and credited to the DMK supremo as commonly believed by the people in the state of Tamil Nadu. [1][2][3]

List of conferences held Edit

List of conferences[4]
Official title Host city Host country Year Arranged by
1st World Tamil Conference Kuala Lumpur Malaysia 1966 Thani Nayagam Adigalar
2nd World Tamil Conference Chennai  India 1968 M. Bhaktavatsalam and C. N. Annadurai
3rd World Tamil Conference Paris  France 1970
4th World Tamil Conference Jaffna  Sri Lanka 1974
5th World Tamil Conference Madurai  India 1981 M. G. Ramachandran
6th World Tamil Conference Kuala Lumpur Malaysia 1987
7th World Tamil Conference Port Louis  Mauritius 1989
8th World Tamil Conference Thanjavur  India 1995 J. Jayalalithaa
References Edit

Sunday, 1 October 2017

pathu paattu

Pathupattu Noolgal in Tamil List - பத்துப்பாட்டு நூல்கள்!!
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும்.

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும்.

இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.

இவை அனைத்தும் இன்று ஒரே தொகுப்பாகக் குறிப்பிடப்படுகின்ற போதிலும், இவை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை. வெவ்வேறு ஆசிரியர்களால் பல்வேறு கால கட்டங்களில் இயற்றப்பட்டவை. பத்துப்பாட்டு எனச் சேர்த்துக் குறிப்பிடும் வழக்கமும் பிற்காலத்தில் எழுந்ததென்பதே பலரது கருத்து.

இந்த அரிய தொகுப்புக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.

Similar Threads:
provision list in tamil excel
mahabharata characters names list in tamil
monthly grocery list in tamil
calcium rich fruits and vegetables list in tamil
List of 64 Arts in Tamil - ஆய கலைகள் அறுபத்து நான்கு
International Men's day Contest!

Penmai's Celebrity Talk Show!!