Friday, 27 October 2017

நாலடியாா்

கைந்நிலை வரலாறு

கைந்நிலை என்ற நூல் 1931 ஆம் ஆண்டு பேராசிரியர் திரு. அனந்தராம ஐயர் அவர்களால் முதலில் அச்சியற்றி வெளிவந்ததாகத் தெரிகிறது. அவர்கள் முகவுரையில் "இந்நூற் பிரதி யொன்று எனக்குச் சிறிது காலத்திற்கு முன் கிடைத்தது. அது முதலிலும் சில பகுதியின்றியும், இருக்கும் செய்யுட்களிலும் சில பகுதி சிதைந்து பிழை விரவியும் இருந்தது. முன்பு வேறு சிலரிடத்திலிருந்த இந்நூல் ஏட்டுப் பிரதிகளைப் பார்த்திருக்கிறேன். அவையும் இதனைப் போலவே முதலிலும் இடையிலும் சில ஏடின்றியும் சிதைந்து பிழைபட்டுமே இருந்தன. அதனைப் பதித்து முற்றுப்பெறுங் காலத்து இராமநாதபுரம் சேது சமஸ்தான வித்துவான் உ. வே. ரா. இராகவையங் காரவர்கள் சென்னைக்கு வந்திருந்தார்கள் அவர்களிடம் இந்நூற் பிரதி யிருப்பதை யறிந்து கேட்டு வாங்கிப் பார்த்து அவ்வேட்டிலுள்ள படியே பதிப்பித்தேன்" என்று விளக்கமாக வரைந்திருக்கின்றனர்.

கைந்நிலை நூற்பதிப்பு முகவுரையில் "இந்நூல் சங்க மருவிய பதினெண் கீழ்க் கணக்கினுள் ஒன்று. அகப் பொருளையே விஷயமாகக் கொண்டுள்ளது. மாறோகத்து முள்ளி நாட்டு நல்லூர்க்காவிதியார் மகனார் புல்லாங்காடனாரால் ஒவ்வொரு திணைக்குப் பன்னிரண்டாக ஐந்திணைக்கும் இயற்றப்பட்ட அறுபது வெண்பாக்களையுடையது. பண்டை யுரையாசிரியர்களாற் சிற்சில இடத்து மேற்கோளாகக் காட்டப் பெற்ற பெருமை வாய்ந்தது" என்று குறித்துள்ளார் ஆசிரியர். 

No comments:

Post a Comment