ஓய்வும் பயனும் !
ஓய்வாக இருக்கையில் தம்பி – நீ
ஓவியம் வரைந்து பழகு !
தூய்மையோ டமைதி சேரும் ! – நன்கு
தோன்றிடும் உள்ள அழகு !
பாக்களும் இயற்றிப் பழகு – நல்ல
பாடலைப் பாடி மகிழ்வாய் !
தாக்குறும் துன்பம் யாவும் – இசைத்
தமிழினில் மாய்ந்து போகும் !
அறிவியல் ஆய்வு செய்வாய் – நீ
அன்றாடச் செய்தி படிப்பாய் !
செறிவுறும் உன்றன் அறிவு – உளச்
செழுமையும் வலிவும் பெறுவாய் !
மருத்துவ நூல்கள் கற்பாய் – உடன்
மனநூலும் தேர்ந்து கற்பாய் !
திருத்தமெய்ந் நூல்கள் அறிவாய் – வருந்
தீமையும் பொய்யும் களைவாய் !
– பெருஞ்சித்திரனார்
பொருள் :
மாணவர்களே! ஓய்வாக இருக்கும் நேரத்தில் ஓவியம் வரையக்
கற்றுக்கொண்டால் தூய எண்ணங்களும் அமைதியும் சேர்ந்து
உள்ளத்தின் அழகு வெளிப்பட, அது காரணமாக அமையும். தமிழில்
பாடல்கள் எழுதவும் பாடவும் பழகிக்கொள்ளுங்கள். இசைத்தமிழின்
இனிமையால் வாழ்வின் துன்பங்கள் தொலைந்துபோகும்.
அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளுங்கள். அன்றாட நிகழ்வுகளைச்
செய்தித்தாள் வாயிலாக அறிந்துகொள்ளுங்கள். உலக நிகழ்வுகளை
அறிவதன்மூலம் அறிவுத்திறன் மேம்படும். உள்ளம் வளமும்
வலிமையையும் பெற்றுச் சிறக்கும். மருத்துவ நூல்களையும் மனநல
நூல்களையும் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். அவை உடலையும்
உள்ளத்தையும் பாதுகாக்கத் துணைபுரியும்.
நீங்கள் வாழ்க்கைக்கு உதவும் தத்துவ நூல்களைக் கற்றால்,
அதன்வழித் தீமையும் பொய்மையையும் விடுத்து நல்வாழ்வு வாழலாம்.
எனவே, ஏட்டுக்கல்வியுடன் கலைஅறிவும் தொழிற்கல்வியும்
அறிவியற் சிந்தனையும் இருந்தால், நீங்கள் வாழ்வில் வெற்றி
பெறலாம். ஆதலால், ஓய்வுநேரத்தைப் பயனுள்ள வகையில்
செலவிட்டு வாழ்வில் வளம்பெறுங்கள்
ஆசிரியர் குறிப்பு :
பெயர் : பெருஞ்சித்தரனார்.
ஊர் : சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம்.
இயற்பெயர் : துரை மாணிக்கம்.
பெற்றோர் : துரைசாமி – குஞ்சம்மாள்.
காலம் : 10.03.1933.
மறைவு : 11.06.1995.
இயற்றிய நூல்கள் :
கனிச்சாறு.
ஐயை.
கொய்யாக்கனி.
பாவியக்கொத்து.
பள்ளிப்பறவைகள்.
நூறாசிரியம்.
தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்கள்மூலம் உலகத்
தமிழரிடையே தமிழுணர்வு உருவாக்க இவர் பாடுபட்டார்.
நூற்குறிப்பு :
இப்பாடல், பள்ளிப்பறவைகள் என்னும் குழந்தைப்பாடல் தொகுப்பின்
இரண்டாம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்நூலிலுள்ள பாடல்கள்
பலவும் தென்மொழி, தமிழ்சிட்டு ஆகிய இதழ்களில் வெளிவந்தவை.
இந்நூல் குஞ்சுகளுக்கு, பறவைகளுக்கு, மணிமொழிமாலை என
முப்பிரிவாக அமைந்துள்ளது.

No comments:
Post a Comment