Monday, 23 October 2017

திருவிளையாடர் புராணம்

திருவிளையாடல் புராணம்
64 திருவிளையாடல்
திருவிளையாடல் பெயர் தொடர்புடைய கட்டுரைகளுக்கு திருவிளையாடல் (பக்கவழி நெறிப்படுத்தல்) பக்கத்தினை காணவும்.
திருவிளையாடற் புராணம் என்பது சிவபெருமானது திருவிளையாடல்களைக் கூறும் பரஞ்சோதி முனிவர் எழுதிய நூல் ஆகும். சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த திருவிளையாடல்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. [1]

ஆசிரியர் குறிப்பு தொகு

பரஞ்சோதி முனிவர் திருமறைக்காடு (வேதாரணியம்) எனும் ஊரில் சைவ வேளாளர் மரபில் மீனாட்சி சுந்தர தேசிகர் என்பாரின் மகனாகப் பிறந்தவர். மதுரையில் சற்குருவை ஏற்று சைவ சந்நியாசம் பெற்றார். மதுரை மீனாட்சியம்மை பரஞ்சோதி முனிவரின் கனவில் தோன்றி சிவபெருமானின் திருவிளையாடல்களை பாடும் படி கூறியமையால் இந்நூலை பரஞ்சோதியார் இயற்றியதாக நம்பப்படுகிறது. இவர் இயற்றிய வேறுநூல்கள்: 1)திருவிளையாடற்போற்றிக் கலிவெண்பா 2)மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி 3)வேதாரணிய புராணம்

இவரது காலம்:கி.பி.16 ஆம் நூற்றாண்டு என்பர்.

நூல் அமைப்பு தொகு

மதுரையில் சிவபெருமான் செய்த திருவிளையாடல்கள் பற்றி ஹாலாஸ்ய மகாத்மியம் என்னும் வடமொழி நூலில் சொல்லப்பட்டுள்ளது. வியாசர் இயற்றிய ஸ்கந்த புராணத்தில் இந்த லீலைகள் சொல்லப்பட்டுள்ளன. நந்தி தேவர் சனத்குமார முனிவருக்கு இந்த லீலைகள் பற்றி சொன்னார் என்றும், அதை வியாசருக்கு சனத்குமாரர் சொன்னார் என்றும், வியாசர் அதை ஸ்கந்தபுராணத்தில் எழுதினார் என்றும் வழங்கப்படுகிறது.

ஹாலாஸ்ய மகாத்மியத்தை பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழி பெயர்த்தார். அதை அப்படியே மொழி பெயர்க்காமல், தமிழுக்கே உரித்தான செய்யுள் நடையில் 3363 செய்யுள்களாக வடித்தார். இதில் முதல் 343 செய்யுள்கள் காப்பு, மதுரை நகர சிறப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. 344 வது செய்யுள் முதல் தான் பெருமானின் திருவிளையாடல் துவங்குகிறது.

திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன,.

மதுரைக்காண்டம் - 18 படலங்கள் கூடற்காண்டம் - 30 படலங்கள் திருவாலவாய்க காண்டம் - 16 படலங்கள்

No comments:

Post a Comment